Pushpa 2

மீனா கேட்ட கேள்வி, அதிர்ச்சி அடைந்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!

மீனா கேட்ட கேள்வியால் ரோகிணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

SiragadikkaAasai Serial Today Episode Update 08-01-25
SiragadikkaAasai Serial Today Episode Update 08-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் எனக்கு பணம் எப்ப கிடைக்கும் எனக்கு அவசரமா தேவைப்படுது என்று சொல்ல முத்து நீ பாட்டுக்கு தொலைச்சுட்டு ஏமாந்துட்டு வருவ உனக்கு நான் சீக்கிரம் தேடித்தரணுமா அதுவும் இல்லாம என்னோட வேலை வெட்டி விட்டுட்டு மீனாவும் அவருடைய வேலை எல்லாம் விட்டுட்டு தேடிக்கிட்டு இருக்கோ இப்பதான் ஒரு க்ளூ கிடைச்சிருக்கு என்று சொல்லுகிறார்.

அதற்கு அருணாச்சலம் வேலை எல்லாம் விட்டுட்டு எல்லாம் தேடாதீங்க வேலை பார்த்துட்டு பொறுமையா கூட தேடுங்க என்று சொல்ல உடனே விஜயா அவன் என்ன சும்மாவா தேடுறாங்க இப்ப கிடைச்சா அதிலிருந்து பங்கு கிடைக்கும் இல்ல அதனால தான் என்று சொல்ல உடனே முத்து கோபப்பட்டு அப்பா நீ சொன்ன ஒரே வார்த்தைக்காக தான் நான் தேடி அலைஞ்சுகிட்டு இருக்கேன் இது மாதிரி எல்லாம் சொன்னாங்கன்னா அவ்வளவுதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். உடனே மீனா நம்ம ஆள கண்டுபிடிச்சாலும் அவன் கிட்ட இருந்து பணம் வாங்க முடியுமான்னு தெரியல என்று சொல்ல, ஏன் மீனா அப்படி சொல்றீங்க என்று ரோகினி கேட்க பண எடுத்துக்கிட்டு போய் இவ்வளவு நாள் ஆகுது இன்னும் செலவு பண்ணாமையா வச்சிருப்பான் என்று கேட்க மூவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே விஜயா அப்ப நம்ம பணம் கைக்கு வராதா என்று கேட்க பொறுத்திருந்து பார்க்கலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

விஜயா மீனாவிடம் இதையே சாக்கா வச்சுக்கிட்டு சமைக்காம இருக்காத போய் சமை என்று சொல்ல உடனே முத்து நாங்க ஹோட்டல்ல சாப்பிட்டு வந்துட்டோம் என்று சொல்லுகிறார் அப்ப எங்களுக்கெல்லாம் என்ன பண்றது என்று விஜயா கேட்க உங்களுக்கும் அப்பாக்கும் ஹோட்டல்ல வாங்கிட்டு வந்தாச்சு என்று சொல்லுகிறார் உடனே மனோஜ் எங்களுக்கு என்று கேட்க உங்களுக்கு வாங்கல என்று சொல்லுகிறார். அண்ணாமலை அவங்களுக்கும் சேர்த்து வாங்குறது தானே என்று கேட்க நீ வேறப்பா அன்னைக்கு வீட்டுக்கு வரலைன்னு சொல்லி தனியா கடையில உட்கார்ந்து இருந்தா சாப்பிட்டு இருக்க மாட்டானு நினைச்சு பிரியாணி வாங்கிட்டு போய் கொடுத்த எல்லாத்தையும் நல்லா தின்னுபுட்டு ஐஸ் வச்சு என் கடையை ஏமாத்தி வாங்கிக்கலாம்னு பாக்குறியா என்று கேட்கிறான் இவனுக்கு எதுக்கு நான் வாங்கி தரணும் என்று கேட்கிறார். இது மட்டுமில்லாமல் அன்னைக்கு பார்லர் அம்மா ரூம்ல தனியா உக்காந்து இருக்கும்போது மீனா சாப்பாடு கொடுக்க போனா அங்க மீனாவை பார்த்து ஆன்ட்டி என்னை திட்டுவது உங்களுக்கு சந்தோசம் தானே என்று இந்த பார்லர் அம்மா கேட்டிருக்கு இவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் யோசிக்கிறாங்க இவங்களுக்கு எதுக்கு நாங்க வாங்கி தரணும் வேணும்னா அவங்களே செஞ்சுக்க சொல்லு என்று சொல்ல, அந்த நேரம் பார்த்து ரவியும் ஸ்ருதியும் வருகின்றனர். உடனே விஜயா எங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தானே டிபன் வாங்கினீங்க இவங்களுக்கு என்ன பண்றது என்று சொல்ல சுருதி அவசியமே இல்ல மீனா எங்ககிட்ட போன் பண்ணி சொல்லிட்டாங்க நாங்க பீட்சா வாங்கிக்கிறோம் னு சொல்லிட்டோம் என்று சொல்லுகிறார். மனோஜ் மீனாவ தோசை ஊத்தி தர சொல்லுமா என்று சொல்லுகிறார். மீனா தான் தோசை ஊத்தணுமா உன் பொண்டாட்டி ஊத்துனா சாப்பிட முடியாதா என்று கேட்க பிறகு ரோகிணி சமைக்கிறார்.

கிச்சனின் ரோகினி தோசை ஊத்த தோசை பிஞ்சு பிஞ்சு வருகிறது உடனே அங்கு வந்த சுருதி என்ன ரோகினி தோசை கூட சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார் உடனே பீட்சா சாப்பிட்டது டைஜஷன் பிராப்ளமா இருக்கு டீ போட்டு கொடுக்குறீங்களா ரோகிணி என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். சரி போட்டு தரேன் என்று ஒரு பக்கம் டீ தூளை அள்ளிக் கொட்டுகிறார். தோசை கருகி கருகி வருவதை பார்த்து மீனா எண்ணெய் தேய்ச்சுட்டு தோசை ஊத்துங்க தீய கம்மி பண்ணுங்க என்று சொல்லிக் கொடுக்கிறார் விஜயாவும் மனோஜும் தோசைக்காக வெளியில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஸ்ருதிக்கு டீ கொடுத்த ரோகினி உங்கள டீ போட சொன்னா டீ மாதிரி எதையோ போட்டு இருக்கீங்க இதுக்கு பேரு டீ இல்ல கசாயம் என்று சொல்லுகிறார். உடனே மனோஜ் பசிக்குது ரோகினி என்று கத்த ரோகினி தோசையும் சட்னியும் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார் ஆனால் தோசை தீஞ்சு போயும் சட்னி காரமாக இருப்பதால் இருவரும் சாப்பிடாமல் விஜயா எனக்கு பால் மட்டும் எடுத்துக் கொண்டு வந்து கொடு என்று சொல்லிவிட்டு கிளம்ப மனோஜ் ஏதாவது ஆர்டர் பண்ணிக்கிறேன் என்று சொல்லுகிறார். பிறகு கிச்சனில் கோபமாக ரோகினி நின்று கொண்டிருக்க மீனா உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று சொல்ல என்ன உங்களுக்கு ஏதாவது வேலை பார்க்கணுமா என்று கேட்கிறார். இல்ல உங்களுக்கு சிட்டிய தெரியுமா என்று கேட்க சிட்டி கிட்ட என் கடன் வாங்கி இருக்கீங்க என்று கேட்கிறார்.

உடனே ரோகினி அதிர்ச்சியாக மீனா அவனை இவ்ளோ பெரிய பிராடு என்று தெரியும் இல்ல அவன் கிட்ட எதுக்கு கடன் வாங்கினீங்க என்று கேட்கிறார். ரோகினி எதுவும் சொல்ல முடியாமல் நிற்க சுருதி உங்களுக்கு எதுக்கு இப்போ இவ்வளவு வேர்க்குது என்று கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல உங்க ரெண்டு பேரா அட்வைஸ்க்கு தேங்க்ஸ் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் முத்து மற்றும் ரவி இருவரும் இதே விஷயத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்க மனோஜிடம் ரவி அண்ணி எதுக்கு சிட்டி கிட்ட கடன் வாங்கி இருக்காங்க என்று கேட்கிறார்.

அதற்கு மனோஜ் சொல்லும் பதில் என்ன?ரோகினிடம் போய் மனோஜ் என்ன கேட்கிறார்? அதற்கு ரோகிணி என்ன பதில் சொல்லப் போகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 08-01-25
SiragadikkaAasai Serial Today Episode Update 08-01-25