முத்து சொன்ன விஷயம், சந்தோஷப்பட்ட மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்து சொன்ன விஷயத்தை மீனா சந்தோஷப்பட்டு உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தோஷி சார் என்ன சொன்னாரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண உடனே இவ்ளோ பெரிய வீடு வாங்கி இருக்க கூடாது என்று ரோகினி சொல்ல நீயும் தானே ஆசைப்பட்ட என்று சொல்லுகிறார் எல்லாமே என் தப்புன்னு சொல்ல வரியா என்று கேட்க நான் அப்படியெல்லாம் சொல்லல இதுக்கு என்ன பண்றது என்று கேட்க முதல்ல அந்த கதிரை கண்டுபிடிக்கணும், அவன்கிட்ட இருந்து பணத்தை வாங்குனா தான் இந்த பிரச்சனைக்கு எல்லாம் முடிவு கிடைக்கும் என்று சொல்ல மனோஜ் உங்க அப்பா கிட்ட பணம் கேட்கலாம் என்று சொல்லுகிறார்.
உடனே கோபப்பட்ட ரோகினி எப்ப பார்த்தாலும் நீயும் சரி உங்க அம்மாவும் சரி எங்க அப்பா கிட்ட பணம் கேளு ன்னு சொல்றீங்க நான் பணம் கேக்குறதுக்கு மட்டும் போன் பண்ணா அவரு என்ன நினைப்பாரு பணத்துக்காக பேசுறேன்னு நினைப்பாரு என்று கத்தி ஆக்சன் போடுகிறார். பிறகு கதிர பத்தி அங்க போய் விசாரி என்று சொல்லிவிடுகிறார். மறுபக்கம் முத்து விசாரித்து வைத்த அந்த நடிகரின் தங்கச்சிக்கு திருமணம் என்பதால் முதலில் கேட்டரிங் ஆர்டர் பேசி செல்கின்றனர் உடனே சிந்தாமணி பூ டெக்கரேஷன் பற்றி பேச வர அவரும் நான் என் தங்கச்சி கிட்ட கேட்டு சொல்றேன் என்ன சொல்லி அனுப்பி வைக்கிறார்.
சிந்தாமணி கிளம்பும் நேரத்தில், முத்து சொன்னபடி அந்த வீட்டில் பூ கொடுக்க வருகிறார். உள்ளே போன மீனா அவரிடம் இந்த ஏரியாவுல பைக்ல பூ வச்சு விக்கிற உங்களுக்கு டெய்லியும் பூ கொடுக்கவா என்று கேட்க சரி 200 ரூபாய்க்கு கொடு என்று சொல்லுகிறார். உடனே சந்தோஷப்பட்டு மீனா வெளியே வர சிந்தாமணி ஆர்டர் கிடைத்த சந்தோஷத்தில் வருவதாக நினைத்து மீனா விடம் இந்த ஆர்டர் நான்தான் பேசி இருக்கேன் என்று சொல்ல கல்யாணம் நடக்க போகும் விஷயத்தை சொல்லுகிறார். உடனே எதுவும் பேசாமல் மறுபடியும் உள்ளே சென்று பேசிவிட்டு வர சிந்தாமணி இடம் இதுக்கு முன்னாடி இந்த வீட்ல கல்யாணம் இருக்குனு எனக்கு தெரியாது நான் போய் கேட்க தான் போனேன் நீங்க சொல்லி தான் தெரியும் ரொம்ப நன்றி இதே மாதிரி எனக்கு ஏதாவது பண்ணிங்கனா உங்களுக்கு கமிஷன் கொடுக்கிறேன் என்று சொல்ல சிந்தாமணி டென்ஷன் ஆகிறார்..
மறுபக்கம் கார் செட்டில் சவாரி இல்லாமல் முத்துவும் செல்வமும் பேசிக்கொண்டிருக்க, இதை மட்டும் நம்பிட்டு இருந்தா வருமானம் பார்க்க முடியாது அதனால எனக்கு ஒரு ஐடியா தோணுது என்று சொல்லுகிறார் என்ன விஷயம் என்று கேட்க நம்மளுக்கு தெரிஞ்சது என்ன கார் ஓட்டுவது அது சம்பந்தமாக ஏதாவது பண்ண முடியும் என்று சொன்ன கார் டிரைவிங் கிளாஸ் எடுக்கலாம்னு இருக்கேன் என்று சொல்லுகிறார்.நல்ல ஐடியா தானே என்று முத்து சொல்ல, அதுக்கு ரொம்ப நேரம் எல்லாம் ஆகாது காலைல ரெண்டு மணி நேரம் சாயங்காலம் ரெண்டு மணி நேரம் மட்டும் போதும் டைம் எடுத்துக்கிட்டா என்று சொல்ல, சரி பண்ணிடலாம் மீனாவும் ரொம்ப சந்தோஷப்படுவா என்று சொல்லுகிறார். அதற்கு அட்ரஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்ல உங்க வீட்டு அட்ரஸ் கொடுக்கலாம் அங்க தான் கத்துக்க ஈசியா இருக்கும் என்று சொல்ல எங்க அப்பா ஒன்னும் சொல்ல மாட்டாரு ஆனால் எங்க அம்மா அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்க மாட்டாங்க நான் அதுக்கான நேரம் வரும்போது நான் கேட்டு சொல்றேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கே மீனா வருகிறார்.
உடனே மீனாவிடம் டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிக்கப் போகும் விஷயத்தை சொல்ல மீனாவும் சந்தோஷப்படுகிறார். உடனே அதுக்கு அட்ரஸ் கொடுக்க வேண்டும் என்று சொல்ல நம்ம வீட்டு அட்ரஸ் கொடுத்தா அத்தை கோபப்படுவார்கள் என்று சொல்ல, கரெக்டா சொன்ன மீனா அதுக்காக தான் யோசிச்சிட்டு இருக்கோம் என்று சொல்ல,வேணும் என்றால் அம்மா வீட்டு அட்ரஸ் கொடுக்கலாமா என்று கேட்க வேண்டாம் அங்க அம்மாவும் தங்கச்சியும் தனியா இருப்பாங்க அதனால வேண்டாம். என்று பேசிக் கொண்டிருக்க நீ அந்த நடிகர் வீட்டில் போய் விசாரிச்சியா என்று கேட்கிறார். விசாரிச்சா நல்ல மனுஷன் அதான் தெரியுறாரு என்று சொல்ல அது எப்படி பார்த்த உடனே நல்ல மனுஷன் தெரியும் என்று கேட்கிறார் ஒருத்தவங்கள பார்த்தாலே தெரியாதா என்று மீனா சொல்ல அப்போ நீ என்னை முதல்ல பாக்கும்போது நல்லவன் தான் நினைச்சேன் என்று கேட்கிறார்.
முதல்ல மட்டும் இல்லை என்று ஆரம்பிக்க அப்படினா கெட்டவன் தானா என்று கேட்கிறார் உடனே செல்வம் ஆள் யாருன்னே தெரியாத இடத்துல போய் விசாரிச்சுட்டு வந்திருக்காங்க அந்த தைரியத்தை பாராட்டாம நீ ஏன்டா இப்படி பேசிகிட்டு இருக்க என்று சொல்ல அந்த தைரியம் நான் தான் கொடுத்தேன் என்று முத்து சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு பொறந்ததுல இருந்தே அந்த தைரியம் இருக்கு என்று மீனா சொல்லுகிறார்.
மறுபக்கம் மீனாவை பாலோ பண்ணி வந்த நபரும் வித்யாவும் ஸ்கூட்டியில் மோதிக்கொள்ள அவர் வித்யாவை ஸ்கூட்டி இல் இருந்து விழாமல் தாங்கி பிடிக்கிறார். வித்யா சண்டைக்கு போக எல்லாத்துக்கும் நான் தாங்க காரணம் வண்டி என்ன பிரச்சனை ஆனாலும் சரி பண்ணி கொடுத்துடறேன் என்று சொல்ல வண்டி ஸ்டார்ட் ஆகாமல் இருக்கிறது வித்யா கோபப்பட்டு பேசினாலும் அவர் பொறுமையாகவே பேசி பக்கத்துல இருக்குற மெக்கானிக் ஷாப்ல ரெடி பண்ணி கொடுக்கிறேன் என்று சொல்லி அழைத்து செல்கிறார். அங்கே இருக்கும் இரண்டு பேர் இவனை மோதிர மாதிரி மோதிட்டு எப்படி கரெக்ட் பண்ணி கூட்டிட்டு போறான் பாரு என்று சொல்ல உடனே அவர் வண்டியில் இருந்து காலை எடுத்துவிட்டு அய்யய்யோ நான் அது மாதிரியெல்லாம் பண்ணலைங்க நான் அந்த மாதிரி ஆள் இல்லை என்று சொல்ல வித்யா வெக்கப்பட்டு சிரிக்கிறார். உடனே சரி போலாமா என்று கேட்க வித்யா போலாம் என்று சொல்லுகிறார்.
மனோஜ்,ரோகினி வீட்டுக்கு வர விஜயா என்ன கேட்கிறார்? அதற்கு ரோகிணியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.