மனோஜ் கேட்ட கேள்வி, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
மனோஜ் கேட்ட கேள்வியால் ரோகினி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி இடம் அண்ணாமலை மற்றும் பாட்டி இருவரும் நடந்ததெல்லாம் இதோட போகட்டும் இதுக்கு அப்புறம் இந்த வீட்டுக்கு உண்மையான மருமகளாகவும் மனோஜ் நல்ல மனைவியாகவும் இருக்கணும் சொல்ல ரோகிணியும் தலையை ஆட்டுகிறார் உடனே பாட்டி மீனாவிடம் கற்பூரம் ஏத்தி தட்டை எடுத்துக்கிட்டு வா என்று சொல்ல மீனாவும் எடுத்து வருகிறார் பிறகு பாட்டி ரோகினியே வரவைத்து இனிமே எந்த பொய்யும் சொல்ல மாட்டேன் என்று சத்தியம் பண்ண சொல்ல ரோகிணியும் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சத்தியம் செய்கிறார் உடனே சரி ரூமுக்கு போங்க என்று சொல்ல ரோகிணி போகும்போது முத்துமீனாவை முறைத்துக் கொண்டே போகிறார்
கொஞ்ச நேரத்தில் ஹாலில் அனைவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அவளை இந்த வீட்டை விட்டு துரத்தலாம் என்று பார்த்தால் நீங்கள் அவளை வீட்டில் உட்கார வச்சு இருக்கீங்க என்று விஜயா கோபப்பட அவ தப்பு பண்ணதுக்கு நீயும் ஒரு காரணம்தான் நீ பணம் முக்கியம்னு நினைச்ச அதனாலதான் அவ பொய் சொல்லி இருக்கா என்று சொல்லி அட்வைஸ் கொடுக்கிறார்.மூணு மருமகளையும் ஒரே மாதிரி பாரு என்று சொல்ல முத்து சரி பஞ்சாயத்து தான் முடிஞ்சிடுச்சு இல்ல எனக்கு பசிக்குது நான் போய் ஏதாவது வாங்கிட்டு வரேன் எல்லாரும் ஒண்ணா உக்காந்து சாப்பிடலாம் என்று சொல்லி சென்றுவிட பாட்டியும் அண்ணாமலையும் சென்று விடுகின்றனர்.
ரோகினி ரூமில் நின்று கொண்டிருக்க மனோஜ் வருகிறார் ரோகினி மனோஜிடம் ரொம்ப தேங்க்ஸ் மனோஜ் நீ என்ன காப்பாத்துனதுக்கு என்று சொல்ல நான் உன்னை காப்பாற்றத்துக்காக அப்படி சொல்லல நீ போன வைக்கும்போது உங்க அம்மா என்ன அடிக்க கூடாதுன்னு சொன்ன ஒரு காரணத்துக்காக தான் அப்படி சொன்னேன் இல்லன்னா அம்மாவும் அதிகமா அடிச்சிருப்பாங்க என்று சொல்லிவிட்டு எல்லாரும் மாறி என்னையும் ஒரு கோமாளி தானே நீ ஆக்குன என்று மனோஜ் கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். நான் இது எல்லாமே உனக்காக தான் மனோஜ் பண்ண உன் கூட வாழனும் என்று தான் என்னோட ஆசை என்றெல்லாம் பேச அதற்கு மனோஜ் இதுவாவது உண்மையா இல்லை இதுவும் பொய்யா என்று கேட்க ரோகினி மீண்டும் அதிர்ச்சி அடைகிறார். நீ இப்படி எல்லாம் பேசுவதை பார்த்தால் என்கிட்ட நீ உண்மையை சொல்லி இருக்கணும் ரோகினி என்று சொல்ல ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லணும்னு தான் மனோஜ் நினைச்சேன் அதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கல இன்னும் ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துட்ட பிறகு சொல்லலாம்னு இருந்தேன் உனக்காக தான் மனோஜ் எல்லாமே பண்ண உன்மேல வேணா சத்தியம் பண்றேன் என சொல்லி வர இனிமே உன் சத்தியம் உன்னோட பேச்சை எதுவும் நம்புற நிலைமையில் நான் இல்லை என்று சொல்லிவிட்டு ரூமை விட்டு வெளியே போக ரோகினி கண்கலங்கி உட்காருகிறார்.
மறுபக்கம் மொட்டை மாடியில் முத்து மீனா ரவி சுருதி நால்வரும் பேசிக்கொண்டிருக்க மனோஜ் வருகிறார். ஆனால் மனோஜ் இவர்கள் நால்வரும் ரோகிணி பற்றி பேசுவதால் படிக்கட்டில் நின்று இவர்கள் பேசுவதை கவனிக்கிறார் முத்து இன்னமும் எனக்கு பார்லர் அம்மா ஏதோ ஒரு உண்மையை மறைக்குது தோணுது. என்று சொல்ல அதற்கு மீனா அவங்க தான் தெளிவா சொல்லிட்டாங்களே அத்தை வந்து பணக்கார மருமகளா இருக்கணும் சொன்னாங்க அதனால தான் இவ்வளவு பொய் சொன்ன இவ்வளவு தப்பு பண்ண அதுக்குள்ள காரணம் அதுதான்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல அதற்கு ஸ்ருதி அதுக்குன்னு இவ்வளவு பொய் சொல்லனுமா என்று கேட்கிறார். மேலும் அவங்க அப்பாவ தான் கெட்டவரு சரி ஆனா அவங்க அம்மா நல்லவங்க தானே அவங்க போட்டோவ ஏன் இதுவரைக்கும் காட்டல என்று முத்து கேட்க மனோஜ் இதை கவனிக்கிறார். அது மட்டும் இல்லாம மனோஜ் வந்து கடைசியா இந்த உண்மை எனக்கு தெரியும்னு சொன்னது சுத்தமான பொய்.
அவன் உண்மை தெரிஞ்சி போய் குடிக்க ஆரம்பிச்சான். ஏற்கனவே தெரிஞ்ச உண்மைக்கு யாராவது இவ்வளவு அப்செட்டாவார்களா என்று முத்து கேட்க மற்றவர்களும் ஆமாம் என்று நினைக்கின்றனர் உடனே மனோஜ் அங்கிருந்து சென்று விடுகிறார். பிறகு அவர்கள் என்ன பேசிக் கொள்கின்றனர். மனோஜ், ரோகினி பேசினார்களா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
