மீனாவின் உறவினர்களை அசிங்கப்படுத்திய விஜயா, மீனா எடுத்த முடிவு? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா மீனாவின் உறவினர்களை அசிங்கப்படுத்தி பேச, முடிவு ஒன்று எடுத்துள்ளார் மீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரவியிடம் பேசியதை பார்த்து முத்துவும்,மீனாவும் பேசிக்கொள்கின்றன. உடனே மீனா கொஞ்சம் இருங்க என்று சொல்லி ஃபோனை எடுத்து ரவிக்கு போன் போட்டு ஏன் ரவி இப்படி பண்ணிட்டீங்க ஸ்ருதிக்கு உடம்பு சரியில்லைன்னா நீங்க கூட இருந்து பாத்துக்கணும் தானே இதே உங்களுக்கு உடம்பு சரியில்லாம இருந்தா கண்டிப்பா ஸ்ருதி உங்கள பார்த்து இருப்பா இது உங்க அண்ணனை எடுத்துக்கோங்க எனக்கு ஏதாவது உடம்புக்க முடியவில்லை என்றால் சவாரிக்கு போக மாட்டாங்க என்று சொல்ல புரியுதா நீ நான் சீக்கிரம் வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்தேன் அதுக்குள்ளே இப்படி பண்ணிட்டா என்று சொல்ல நீங்க அத்தை சொன்ன மாதிரி போகாமல் விட்றாதீங்க ஸ்ருதிய சமாதானம் பண்ணி கூட்டிட்டு வாங்க என்று சொல்லுகிறார் சரி என ரவியும் போனை வைக்கிறார்.

மீனா வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற அந்த நேரம் பார்த்து அவர்களது சொந்தக்காரர்கள் வந்து பத்திரிக்கை வைக்கின்றனர். அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உட்கார வைத்த மீனா அவர்கள் பத்திரிக்கை வைத்தவுடன் கண்டிப்பாக ஒருநாள் முன்னாடியே வந்துடுவோம் என்று சொல்லுகிறார். மாமியார் ,மாமனார், வீட்டுக்காரர் இல்லையான்னு கேட்டேன் எல்லாரும் வெளியே போய் இருக்காங்க என்று சொல்லுகிறார். நான் கிளம்புறோமே நான் என்று சொல்ல முதல் முறையாக வந்து இருக்கீங்க சாப்பிடாம போகக்கூடாது என்று சொல்லுகிறார் இல்ல நாங்க இன்னும் நிறைய வீட்டில் பத்திரிக்கை கொடுக்கணும் கிளம்புறோம் என்று சொல்லு மீனா வற்புறுத்தி சாப்பிட்டு தான் போகணும் என்று சொல்லுகிறார். சரி என சம்மதித்து அவர்களும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன.

கிச்சனுக்கு சென்ற மீனா முத்துவுக்கு போன் போட்டு உறவினர்கள் வந்திருப்பதாக சொல்ல அவர் இப்போ நானு சவாரியில் இருக்க, நான் வர லேட் ஆகும் நீ பத்திரிக்கை வாங்கிக்கோ நம்ம கல்யாணத்துக்கு போயிட்டு வந்துரலாம் என்று சொல்ல நான் சாப்பாடு போட்டு அனுப்புறேன் என்று சொல்லுகிறார். உடனே முத்துவும் பொறுமையாக உக்கார வச்சு சாப்பாடு போட்டு அப்புறம் அனுப்பிவை ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்லுகிறார்.

மீனா அவர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து விஜயா வெளியில் அதிகமா இருக்கு மீனா தண்ணி கொண்டு வா என்று சொல்லுகிறார். அவர்கள் சாப்பிடுவதை பார்த்து விஜயா நின்று கொண்டிருக்க மீனா தண்ணி கொண்டு வந்தவுடன் யார் இவங்க என்று கேட்கிறார் எங்க சொந்தக்காரங்க பத்திரிக்கை வைக்க வந்திருக்காங்க அவங்க தான் என்று சொல்ல யாரை கேட்டு உட்கார வச்சிருக்க என்று கத்துகிறார் உடனே ரூமுக்குள் சென்ற விஜயா கோபமாக மீனாவிடம் பேசுகிறார். பத்திரிக்கை வந்தா கொடுத்துட்டு போக வேண்டியது தானே எதுக்கு உட்கார வைத்து சாப்பாடு போட்டுக்கிட்டு இருக்க இப்படி தான் மளிகை சாமான் வேகமாக காலி ஆகுதா என்று எல்லாம் பேசுகிறார். மீனா கத்தி பேசாதீங்க காதுல விழப்போகுது, அவங்க போனதுக்கப்புறம் என்ன வேணா திட்டுங்க நான் வாங்கிக்கிறேன் என்று சொல்லுகிறார். நீ எனக்கு சொல்றியா எப்படி பேசணும் என்று வெளியே வந்து விஜயா அவர்களை அவமானப்படுத்தும் படி பேசி அனுப்பி விடுகிறார். அந்த நேரம் பார்த்து ரோகினியும் வருகிறார். மீனா கோபமாக நான்தான் அவங்க போன அப்புறம் பேசிக்கலாம்னு சொன்ன எல்லாத்தையும் சந்தோஷமா பத்திரிக்க வைக்க வந்தாங்க ஆனா இப்ப கஷ்டத்தோட போறாங்க என்று சொல்ல ரோகிணி நீங்க ஆன்ட்டி கிட்ட ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம் இல்ல என்று சொல்ல நான் என்னோட புருஷன் கிட்ட கேட்டு தான் செஞ்சேன் என்று சொல்லுகிறார். இது என் வீடு என்னதான் கேக்கணும் என்று விஜயா சொல்லிவிட்டு எங்களுக்கு போய் சமை என்று சொல்லிவிடுகிறார்.

SiragadikkaAasai Serial Episode Update
SiragadikkaAasai Serial Episode Update

மீனா பூ கட்டும் இடத்தில் சோகமாக இருக்க பூ கட்டுபவர்கள் என்ன ஆச்சு மீனா என்று கேட்கின்றனர் வீட்டில் நடந்த விஷயங்களை மீனா சொல்ல உன் மாமியாருக்கு உடம்பு புல்லா கொழுப்பு இருக்கு மத்த மருமக கிட்ட அப்படியே நடந்துக்குறாங்க உங்கிட்ட மட்டும் நடந்துக்குறான்னா என்ன காரணம் நம்மகிட்ட வசதி இல்லன்னு தானே என்று சொல்லுகிறார் நீ நல்லா கேட்கணும் என்று சொல்ல அவங்கதான் இங்கீதம் இல்லாம நடந்துக்குறாங்க நானும் அதே மாதிரி நடந்துக்க முடியுமா என்று கேட்க நம்ம விட்டுக் கொடுத்துதே போனா நம்பல தான் ஏறி மிதிப்பாங்க இன்று எல்லாம் சொல்லுகின்றனர்.

உன் மாமியார பெல்ட்டுலியே ஒரு நாளைக்கு செம்ம அடி அடிச்சனா உன் வழிக்கு வர மாட்டாங்க, என்று சொல்ல மீனா ஐயோ இதெல்லாம் பாவம் கா நான் பண்ண மாட்டேன் நீங்க என்ன இப்படி எல்லாம் சொல்றீங்க என்று சொல்ல உன் மாமியார் நல்லவங்களா இருந்தா நான் ஏன் சொல்ல போற அவங்க பண்றது மட்டும் பாவம் இல்லையா அவங்க செஞ்ச விஷயம் பாவம் இல்லையா என்றெல்லாம் சொல்ல மீனா யோசித்துக் கொண்டு நிற்கிறார். என்னதா இருந்தாலும் நான் இதெல்லாம் பண்ண மாட்டேன் கா என்று சொல்லிவிடுகிறார்.

விஜயா வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் தும்பிக் கொண்டே உள்ளே வருகிறார். என்னாச்சுடா என்று சொல்ல கோல்ட் ஆயிடுச்சும்மா என்று கேட்க என்ன சாப்பிட்ட என்று கேட்க பானி பூரி சாப்பிட்டேன் என்று மனோஜ் சொல்லுகிறார். உனக்கு தான் பானி பூரி சாப்பிட்டா செட்டாகாது இல்ல எதுக்கு சாப்பிட்ட நண்டு சூப் வைத்து குளிச்சா சரியா போயிடும். என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் அந்த நேரம் மீனா வர மீனாவை கூப்பிட்டு மனோஜ்க்கு ஜலதோஷம் புடிச்சிருக்கு நீ போய் நண்டு வாங்கிட்டு வந்து சூப் வைத்துக் கொடு என்று சொல்கிறார்.

என்னால உங்க பிள்ளைக்கு தனியா எல்லாம் எதுவும் செய்ய முடியாது என்று மீனா மறுக்க நான் உங்க சொந்தக்காரர் கிட்ட நடந்துகொண்டேன் என்று இப்படி பண்றியா என்று கேட்கிறார். மீனா என்ன சொல்லுகிறார் ?அதற்கு மனோஜ் சொன்னது என்ன? மீனாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update
SiragadikkaAasai Serial Episode Update