
ரோகினிக்கு மரண பயத்தை காட்டிய மீனா, முத்துவிற்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்!!
ரோகினிக்கு மீனா மரண பயத்தை காட்ட முத்துவிற்கு சந்தேகம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ரூமில் யோசித்துக் கொண்டிருக்க மனோஜ் என்ன விஷயம் என்று கேட்கிறார் ஒன்னுள்ள மனோஜ் பெங்களூர்ல ஒரு பிரைடு மேக்கப் இருக்கு போலாமா வேணாமா யோசிச்சுக்கிட்டு இருக்க என்று சொல்லுகிறார் காசு அதிகமா வந்தா போக வேண்டியது தானே என்று சொல்ல அதுக்குள்ள அன்னைக்கு இங்கேயும் ஆர்டர் இருக்கு அதுக்கு தான் யோசிக்கிறேன் என்று பேசிக்கொண்டே இருக்கின்றனர்.
அந்த நேரம் பார்த்து போலீஸ் வந்து அண்ணாமலை யார் என்று கேட்க முத்து வந்து என்னோட அப்பா தான் கவர்மெண்ட்ல வேலை செஞ்சு ரிட்டயர்மென்ட் ஆயிருக்காரு என்று சொல்லிக் கொண்டிருக்கிற விஜயா உடனே வந்து ஏதாவது தப்பு பண்ணிட்டானா யாரையாவது அடிச்சுட்டானா இவங்க கூட்டிட்டு போக வந்திருக்கீங்களா என்று கேட்க முத்து ரொம்ப ஆசை தான் என்று சொல்லுகிறார். உடனே அண்ணாமலை கூப்பிட உடனே விஜயா நீங்க ஏதாவது தப்பு பண்ணிட்டீங்களா என்று கேட்க போலீஸ் வந்தாலே இது தான் அர்த்தமா தள்ளு என்று விசாரிக்கிறார். பிறகு பாஸ்போர்ட் வந்திருக்கும் விஷயத்தை சொல்ல அண்ணாமலை இடம் கையெழுத்து வாங்குகின்றனர். அந்த நேரம் பார்த்து மலேசியா மாமாவாக ரோகிணி ரெடி பண்ண கறிக்கடைக்காரர் வருகிறார்.போலீஸ் இருப்பதை பார்த்து வாசலிலே உள்ள போலாமா வேணாமா என்று யோசித்து நின்று கொண்டிருக்க போலீஸ் நீங்க யாரு என்று கேட்கிறது உடனே ரோகினி அவர் என்னுடன் மாமா தான் என்று சொல்ல அமைதியாக சென்று விடுகின்றனர்.
உள்ளே வந்த கறி கடைக்காரர் அமைதியாக நிற்க என்னாச்சு சம்பந்தி நாங்களே மலேசியா போலான்னு தான் முடிவு பண்ணி வச்சிருக்கோம் என்று சொல்ல உடனே அவர் அழுது கொண்டே இந்த விஷயத்தை நான் எப்படி சொல்றது உங்க அப்பாவுக்கு என்று ஆரம்பிக்க அப்பாவுக்கு என்ன ஆச்சு என்று கேட்க ஜெயில்ல பகையை காரணமாக வைத்து உங்க அப்பாவ கொன்னுட்டாங்க என்று சொல்ல ரோகிணி கதறி அழுகிறார். சரி இறுதி சடங்குக்காவது நம்ம போகலாம் என்று அண்ணாமலை முடிவெடுக்க அதுக்கு வாய்ப்பே இல்லை ஜெயில்ல வச்சு கொலை பண்ணது தெரிஞ்சா தப்பா ஆயிடும்னு சொல்லி ஹார்ட் அட்டாக் மாத்தி அவர்களை எல்லாத்தையும் பண்ணிட்டாங்க என்று சொல்ல ரோகினி கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து டிராமா போடுகிறார். உடனே மயங்கி விழ கறிக்கடைக்காரர் என்ன மயங்குவது எல்லாம் நம்ம டயலாக் இல்லையே என்று யோசித்துக் கொண்டு இருக்கிறார். பிறகு தண்ணீர் தெளித்து ரோகினி எழுப்பி குடும்பத்தினர் அனைவரும் ஆறுதல் சொல்லுகின்றனர். ரோகினி நான் இப்பவே மலேசியா வரேன் என்று அவரிடம் சொல்ல இப்ப போனா சொத்துக்கு வாரிசு இருக்குன்னு தெரிஞ்சு உன்னை ஏதாவது பண்ணிடுவாங்க வேணாமா நான் போயிட்டு நிலவரம் என்னன்னு சொல்ற என்று சொல்ல, உடனே விஜயா ரோகிணியோட சொத்து கைக்கு வராத என்று கேட்கிறார். இந்த நிலைமையில் இப்படித்தான் பேசுவியா என்று அண்ணாமலை சொல்ல அது ரோகினியோட சொத்து தானங்க என்று கேட்கிறார். அதற்கு மலேசியா மாமா அந்த கேஸ்ல இவரோட அப்பா மேல எந்த தப்பும் இல்லன்னா சொத்து ரோகினி கைக்கு வந்துரும் என்று சொல்ல விஜயா அமைதியாகிறார்.
பிறகு அவர் கிளம்ப மனோஜ் ரோகினி அழைத்து ரூமுக்குள் சென்று விடுகிறார். ரோகினி மனோஜ் மடியில் படுத்துக்கொண்டு அழுது கொண்டே நானு உன்னை கூட்டிட்டு போய் அப்பாக்கு அறிமுகப்படுத்தி வச்சு நம்ம கொஞ்ச நாள் மலேசியாவில் இருக்கனும்னு ஆசைப்பட்ட மனோஜ் ஆனா இப்படி நடக்கணும்னு நினைக்கல என்று சொல்ல நானும் அவரை பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தேன் சரி இப்படியெல்லாம் நடக்கணும்னு நம்ம நான் எதிர்பார்த்த அம்மாவிடம் இனி நான் உனக்காக நான் இருக்கேன் உங்க அப்பா இடத்துல இருந்து உன்ன நான் பாத்துக்குறேன் என்று சொல்லி ஆறுதல் சொல்லுகிறார் நாளைக்கா நான் ஷோரூம் லீவ் விட போற உங்க அப்பாவுக்காக இதை பண்ணலாம் என்று சொல்ல அதற்கு உடனே ரோகினி எந்திருச்சு அதெல்லாம் பண்ண வேணாம் ஒரு நிமிஷம் கூட பிசினஸ்ல வேஸ்ட் பண்ண கூடாதுன்னு சொல்லுவாரு என்று சொல்ல நாளைக்கு நான் ஷோரூம் க்கு வரேன் உன் கூட இருந்தா தான் எனக்கு கொஞ்சம் ரிலீஃப் இருக்கும் இல்லனா அழுதுகிட்டே இருப்பேன் என்று சொல்ல சரி உனக்கு என்ன தோணுதோ அதையே செய்யலாம் என்று சொல்லுகிறார் மனோஜ்க்கு போன் வர அவர் வெளியில் இருந்து போக வித்யா போன் பண்ணுகிறார்
என்னடி எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா என்று கேட்க நல்லாவே நடிச்சாரு அந்த ஆளு எல்லாரும் நம்பிட்டாங்க என்று சொல்ல, உன் மாமியார் தான் சொத்தை பத்தி கேட்டிருப்பாங்களே என்று வித்யா கேட்க ஆமா கேட்டாங்க அது கோர்ட்ல கேஸ்ல இருக்குன்னு சொல்லிட்டாரு என்று சொல்லி இப்போதைக்கு இந்த பிரச்சனை முடிஞ்சிடுச்சு என்று ரோகினி சொல்லுகிறார் இல்லாத ஒரு அப்பாவை வர வச்சு அவர் ஜெயிலுக்கு அனுப்பி அவரை போட்டு தள்ற வரைக்கும் உன்னால தான் யோசிக்க முடியும் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
மறுபக்கம் மீனா முத்துவிற்கு பால் எடுத்துக் கொண்டு வர ரோகினி சாப்பிடவே இல்ல அவங்க அப்பா இறந்துட்டாங்க எப்படி சாப்பாடு இறங்கும் என்று பேசிக் கொண்டிருக்க முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. முதல்ல அப்பா இறந்தா ரத்த சொந்தத்துக்கு தான் சொல்லுவாங்க ஆனால் இறந்து கொஞ்ச நாள் ஆகுதுன்னு சொல்றாங்க இப்ப வந்து சொல்றாங்களேன்னு டவுட்டா இருக்கு என்று முத்து சொல்ல அங்க இருக்குற ரூல்ஸ் எல்லாம் நமக்கு என்ன தெரியும் என்று மீனா சொல்லுகிறார் அந்த ஒரு காரணத்தை வச்சு அது என்ன சொன்னாலும் நம்ப வேண்டியதா இருக்கு என்று சொல்லுகிறார். ஆனா இதுல ஏதோ ஒன்னு இருக்கு என்று சொல்ல அப்பா இறந்ததில் கூடவா பொய் சொல்லுவாங்க என்று சொல்ல, அப்பாவை விட முக்கியமான ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்கறதுக்காக இப்படி பண்றாங்க என்று முத்து சொல்லுகிறார். நீ நல்லா யோசிச்சு பாரு மீனா ஆரம்பத்திலிருந்து மலேசியாவில் இருக்காரு, மலேசியால இருக்காருன்னு சொல்லுதே தவிர ஒருவர் தடவையும் நம்ம அவங்களை பார்க்கும் போதும் கேட்கும்போது ஏதாவது ஒன்னு சொல்லி சமாளிச்சுக்கிட்டே இருக்கு ஆனா இப்போ ஒரே முட்டமா இறந்துட்டாருன்னு சொல்லுது எனக்கு தெரிஞ்சு இதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கு கண்டுபிடிக்கலாம் டவுட் இருந்துகிட்டே இருக்கு என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் விஜயா பார்வதி வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சிந்தாமணி வருகிறார். நீங்க ரொம்ப பெரிய டான்ஸ் மாஸ்டர் ராமே எல்லாரும் பேசிக்கிட்டாங்க பெருமையா இருக்கு என்றெல்லாம் பேச விஜயா உங்க பசங்களுக்கு யாருக்கும் சொல்லித் தரணுமா என்று சொல்ல இல்லை எனக்கு தான் சொல்லி தரணும் என்று சொல்ல அதிர்ச்சி அடைகின்றன. எனக்கு ஏற்கனவே கொஞ்சம் பரதம் தெரியும் ஆனால் எனக்கு சரியா கத்துக் கொடுக்க ஆள் இல்ல அதனால இந்தக் கலையில் என்னால் சாதிக்க முடியவில்லை நீங்க கத்துக் கொடுத்தால் நான் கத்துப்பேன் என்று சொல்லி ஏற்கனவே கற்றுக்கொண்டதை ஆடி காட்டுகிறேன் என்று சொல்லுகிறார்.
சிந்தாமணி சூப்பராக டான்ஸ் ஆட விஜயாவிற்கு பிடிக்கிறது. நீங்க எங்க வேலை பாக்குறீங்க என்று கேட்க டெக்ரேசன் பண்ற வேலை பாக்குற என்று சொல்ல பார்வதி விஜயாவோட மருமகளும் அந்த வேலையை தான் பார்க்கிறாய் என்று சொல்ல யார் என்று கேட்கின்றனர் மீனா என்று சொன்னவுடன் அந்த வண்டியில் ஒரு பெட்டியை வச்சிட்டு பூ விக்கிறார் அந்த பொண்ணா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகின்றார்.
ஆனால் விஜயா மீனாவை பிடிக்காதது போல் பேச உடனே சிந்தாமணி நம்ம வெளியே எதிரி தேடுவதை விட வீட்டுக்குள்ளே ஒரு எதிரியை வைத்துக்கொள்வது தான் நல்லது என்று விஜயாவிடம் பழகி பேசி பரதநாட்டியம் கிளாஸில் சேர்ந்து விடுகிறார் உடனே குரு தட்சணை என்று புடவை பழம் எல்லாம் வைத்துக் கொடுக்க விஜயாவிற்கு புடவை எடுத்துக் கொடுத்து அவரை பெருமையாக பேசுகிறார். வெளியில் வந்த சிந்தாமணி இவள வச்சு அவளும் காலி பண்ற என்று முடிவெடுத்து வெளியில் வருகிறார்.
மறுபக்கம் பிரவுன் மணி வித்யா மற்றும் ரோகினி மூவரும் இந்த பிரச்சனை எவ்வளவு ஸ்மூத்தா முடிஞ்சிருச்சு நான் ரொம்ப பயந்துட்டேன் என்று பேசிக் கொண்டிருக்க மீனா இதையெல்லாம் கேட்பது போலவும் உண்மை தெரிந்தது போலவும் நடக்கிறது. மீனா இந்த விஷயத்தை வீட்ல சொல்லாம விட மாட்டேன் என்று கிளம்புகிறார். பிறகு என்ன நடக்கிறது? ரோகினி என்ன சொல்லுகிறார்? நடந்தது என்ன? ரோகினியின் உண்மை மீனாவுக்கு தெரிந்ததா? இல்லையா? எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
