முத்து மீனாவை பழிவாங்க நினைக்கும் ரோகினி, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவை ரோகிணி பழிவாங்க நினைக்கிறார்.

siragadikka asai serial today episode update 13-01-26
siragadikka asai serial today episode update 13-01-26

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் பயத்தில் கத்த உடனே விஜயா வந்த கதவை தரக்கச் சொல்லுகிறார் மனோஜ் அமைதியாக செல்ல என்னாச்சு மனோஜ் உனக்கு எதுக்கு இப்படி தனியா கத்திக்கிட்டு இருக்க என்று கேட்க எனக்கு ரொம்ப பயமா இருக்குமா என்று சொல்லி விஜயாவை கட்டிப்பிடித்து விஜயாவும் அம்மா இருக்கேன் நீ எதுக்கும் கவலைப்படாதே உனக்கு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி ஆறுதல் சொல்லுகிறார் மறுபக்கம் மீனா ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கும்போது முத்து பேசியதே நினைத்துக் கொண்டு வருகிறார் ரவியும் சுருதியும் மீனாவை கவனிக்க அவரிடம் பேச வர அதற்குள் மீனாவை ஒரு கார் மோத வருகிறது உடனே நிறுத்த அது செல்வம் என தெரிய வருகிறது உடனே பயத்தில் மீனா மயங்கி விழ அவரே ஆஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

ஆனால் மீனா மீண்டும் மீண்டும் என் புருஷனை ஏமாத்திட்ட என்று சொல்லிக்கொண்டே இருக்க பிறகு மீனா அம்மா வீட்டில் சாப்பிடச் சொல்லி சொல்லுகின்றனர். உடனே முத்து பதறி அடித்துக் கொண்டு வர சாப்பிடாம இருந்தா தப்பு இல்லன்னு ஆயிடுமா சாப்பிட வேண்டியதானே என்று கோபத்தில் பேச இப்ப கூட கோவமா தான் சொல்லுவியா என்ன ரவி சொல்லுகிறார். ஆனால் மீனா நான் சாப்பிட மாட்டேன் இது எனக்கு நான் கொடுத்துக்கிறது தண்டனை என்று சொல்ல முத்து குழந்தை கிடையாது ஊட்டத்துக்கு என சொல்லிவிட்டு வெளியில் வந்து நிற்கிறார் உடனே ஸ்ருதி ரவியிடம் நீ அங்கிளுக்கு போன் பண்ணு அவர் வந்து சொன்னா சாப்பிடுவாங்க என்று சொல்ல ரவியும் போன் பண்ணுகிறார்.

மறுபக்கம் ரோகிணி வந்து சிந்தாமணி இடம் பேசுகிறார். இப்ப என்ன பண்ண போற என்று சிந்தாமணி கேட்க நாம் மனோஜ் கூட தான் வாழ்வேன் என்று சொல்ல அதற்கு மாஸ்டர் ஒத்துக்க மாட்டாங்களே என்று சொல்ல அப்படி இல்லன்னா அவங்க கிட்ட இருந்து மனோஜ் பிரிச்சிடுவேன் என்று வில்லத்தனமாக பேசுகிறார். இது மட்டுமில்லாமல் அந்த முத்தமும் மீனாவும் பிளான் போட்டு என்ன அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்காங்க அவங்கள அந்த வீட்ல இருந்து துரத்தாம விட மாட்டேன் என்று சொல்ல சிந்தாமணி சந்தோஷப்படுகிறார். சரி நீ போய் ரெஸ்ட் எடுமா சாப்பாடு ரெடி ஆனவுடன் கூப்பிடுவாங்க நீ வந்து சாப்பிடு என்று சொல்லி ரோகிணியை அனுப்பி விடுகிறார், உடனே செந்தாமணி உடன் இருக்கும் நபர் எதுக்காக இவளுக்கு தங்கச்சி சாப்பாடு போட்டுக்கிட்டு இருக்கீங்க நீங்க காரணம் இல்லாம எதுவும் செய்ய மாட்டீங்களே என்ன விஷயம் என்று கேட்கிறார்.

உடனே சிந்தாமணி நம்ம என்ன தொழில் பண்ணிக்கிட்டு இருக்கோம் வீட்டை எழுதி வாங்குவது தான் நம்மளோட மெயின் பிஸ்னஸ் விஜயாவோட வீடு மெயின்ல இருக்கு இப்ப மனோஜ் கடன்ல இருக்கா அடிபட்ட குள்ளநரி அமைதியா இருக்காது இவை ஏதாவது பிரச்சனை பண்ண அவங்க கடன் கொடுத்து அதை வட்டிக்கு மேல வட்டி ஆக்கி விஜயா கிட்ட இருந்து அந்த வீட்டை எழுதி வாங்கிடுவேன் என திட்டம் போடுகிறார். அதோ இல்லாம அந்த முத்துவையும் மீனாவையும் இவள வச்சு துரத்திடுவேன் இவை எனக்கு கிடைச்சிருக்கிற துருப்புச் சீட்டு என்று சொல்லுகிறார்.

கொஞ்ச நேரத்தில் மீனா அழுது கொண்டே இருக்க குடும்பத்தினர் சாப்பிட சொல்லி சொல்லுகின்றனர் சீதாவும் வந்து எதுக்காக இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை வருகிறார். அண்ணாமலையை பார்த்து கதறி அழுத மீனா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் எல்லாருக்குமே மனசுல பட்ட காயம் ஆவதற்கு கொஞ்ச நாள் ஆகும் போக போக சரியாயிடும் சாப்பிடுமா உடம்ப பாத்துக்கோ என்று சொல்லிவிட்டு முத்துவிடம் சாப்பிட சொல்லி சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial today episode update 13-01-26
siragadikka asai serial today episode update 13-01-26