திருமணத்திற்கு சம்மதித்த முத்து, சந்தோஷப்பட்ட மீனா குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
முத்து திருமணத்திற்கு சம்மதிக்க,மீனா குடும்பத்தினர் சந்தோஷப்பட்டு உள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஓட்டிக்கொண்டு வந்து நம்ப பிரச்சினையை மட்டும் தான் யோசிச்சி இருக்கோம் சீதாவோட சந்தோஷத்தை நினைத்து பார்க்கல மீனாவும் எவ்வளவு சொன்னா நான் அதையும் கேட்கல நான் எவ்வளவு முரட்டுத்தனமா இருந்திருக்க இல்லை முதல்ல சீதா ஆசைப்பட்ட வாழ்க்கையே நம்ம அமைச்சு கொடுக்கணும் என்று முடிவு எடுத்த மீனா விடம் விஷயத்தை சொல்லலாம் என நினைக்க வேண்டாம் நேரா அத்தை கிட்ட போய் முதல்ல சொல்லலாம் என கார் ஓட்டி வருகிறார். மறுபக்கம் மீனா சோகமாக வர அண்ணாமலை என்னமா ரெண்டு நாளா முகமே சரியில்லை என கேட்கிறார்.
ஒன்னு இல்ல மாமா என்று சொல்ல எனக்கு தெரியுமா எல்லாம் சீதாவோட கல்யாணம்தானே முத்து கொஞ்சம் பிடிவாதக்காரன் தான் ஆனா சொன்னா புரிஞ்சிப்ப நான் அவன்கிட்ட பேசுறேன் என்று சொல்ல விஜயா உடனே அவங்கள ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க என்று சொல்லுகிறார் என்ன பேசிக்கிட்டு இருக்க நீ மீனாவோ சீதாவும் அப்படிப்பட்ட பொண்ணுங்க கிடையாது குடும்பத்துக்கு மரியாதை கொடுக்கிறவர்கள் என்று சொல்லுகிறார்.
இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என்று சொன்ன ஸ்ருதி வந்து நிற்கிறார்.ஊர் உலகத்துல லவ் பண்றவங்க பெத்தவங்க ஒத்துக்கலைன்னா ஓடிப்போய் தான கல்யாணம் பண்ணிக்கிறாங்க இப்போ சுருதியும் ரவியும் அப்படித்தானே பண்ணாங்க இவ தானே பண்ணி வெச்சா அப்போ இந்த குடும்பத்தை பத்தி யோசிச்சாளா என்று கேட்க உடனே சுருதி எங்க அப்பா அம்மா சம்மதிச்சிருந்தா நாங்க ஏன் இப்படி முடிவு எடுக்கப் போறோம் என்று சொல்ல அண்ணாமலை முடிந்து போன விஷயத்தை எதுக்கு பேசுற என்று கேட்கிறார். ஸ்ருதி மீனாவிடம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு முத்து ஒத்துக்குனதுக்கு அப்புறம் எல்லாரையும் கூப்பிட்டு பண்ணிக்கலாமே என்று சொல்ல அண்ணாமலை அது தப்புமா அப்படி யாரும் பண்ண மாட்டாங்க அது குடும்பத்துக்கு துரோகம் பண்ற மாதிரி என்று சொல்லி மீனாவும் சீதாவும் எந்த காலத்திலும் இது மாதிரி பண்ண மாட்டாங்க அவங்க குடும்ப கௌரவத்தை பத்தி யோசிக்கிறவங்க என்று பெருமையாக பேச மீனா கண்கலங்கி அழுகிறார்.கிச்சனுக்கு வந்து, அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சு இப்படி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன் மாமாவோட முகத்தை கூட என்னால பாக்க முடியல என்று கண்கலங்கி அழுகிறார்.
மறுபக்கம் முத்து வீட்டுக்கு சென்று பட்டுப்புடவை இருக்கு நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க இந்த புடவையை கட்டிக்கோ சீதா என்று கொடுக்க சீதாவின் முகம் மாறுகிறது உடனே சத்யா எந்த ஊரு மாமா என்று கேட்க இந்த ஊரு தான் டா அதுவும் சீதா கேட்ட மாதிரி கவர்மெண்ட் மாப்பிள்ளை ஒரே பையன் என சொல்ல மாமா என சீதா தயங்க வர சொல்லிட்டீங்களா என சத்யா கேட்கிறார் சீதா தான் வர சொல்லணும் என்று சொல்ல நான் சொல்லனுமா என்று கேட்கிறார் ஆமா நீ தான் வர சொல்லணும் அருணை நாளைக்கு பொண்ணு பார்க்க வர சொல்லு என்று சொல்லுகிறார். உடனே அனைவரும் சந்தோஷப்பட முத்து நீ புத்திசாலி பொண்ணு சீதா அருண் எப்படி இருந்தாலும் நீ அவனை மாத்திடுவ அதனால நீ சந்தோஷமா இருக்கணும் எல்லாத்தையும் நினைச்சு பயந்துகிட்டே இருக்க முடியாதுல்ல என்று சொல்ல சீதா சந்தோஷப்பட்டு கண் கலங்கி நன்றி சொல்லி ஆசீர்வாதம் வாங்குகிறார். சந்திரா முத்துவை பாராட்டி பேச முத்து அங்கிருந்து கிளம்புகிறார்.
பிறகு சந்திரா மீனாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல மீனா என்ன சொல்லுகிறார்? அண்ணாமலை பதில் என்ன? முத்து அண்ணா சொல்லுகிறார் ?என்பதை இன்றைய எபிசோடு தெரிந்து கொள்வோம்.
