போனை எடுக்க முடியாமல் தவித்த ரோகினி,சீதாவை தேடி வரும் சம்பந்தம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
முத்துவின் போனை ரோகினியால் எடுக்க முடியாமல் போக மறுப்பக்கம் சீதாவை தேடி திருமண சம்மந்தம் ஒன்று வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவும் பாலை குடித்துவிட்டு தூங்க ரோகிணி கொஞ்ச நேரம் கழிச்சு வந்து பார்க்கலாம் என்று திறந்து பார்க்க இருவரும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கின்றனர்.உடனே போனை எடுக்க மெதுவாக ரோகினி வர உடனே விஜயா தடுத்து நிறுத்துகிறார். இன்னும் தூங்காமல் என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க தூக்கம் வரல ஆன்டி அதான் டீ போடுவதற்கு டீ தூள் எங்கன்னு தெரியல மீனாவ கேக்கலாம்னு வந்தா அவங்க தூங்கிட்டு இருந்தாங்க அதனால யோசிச்சிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார் அவளுக்கு என்ன ஜாலியா வெளியே சுத்துற ,பூ காட்டுற அவங்க அம்மா கொடுக்கிறாங்க நிம்மதியா தூங்குற நமக்கு தான் தூக்கம் வரமாட்டேங்குது அவ சிரிச்சதுக்கு காரணத்தை சொன்னாளா என்று ரோகினிடம் கேட்க இல்லை ஆன்ட்டி எதுவும் சொல்லல என்று சொல்ல அவகிட்ட நீ நாளைக்கு கேளு நான் தெரிஞ்சுக்காம விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
உள்ளே சென்ற ரோகினி மீண்டும் வெளியே வந்து எடுக்கலாம் என்ற போது மனோஜ் வந்து ரோகினியை தூக்கிச் செல்கிறார் அவரிடம் ரொமான்ஸ் ஆக பேசி ரூமுக்கு அழைத்து சென்று விடுகிறார்.
மறுநாள் காலையில் விஜயா டான்ஸ் கிளாஸில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து மீனா சிரித்தது விஜயாவிற்கு ஞாபகம் வருகிறது. இதனால் அவரால் சரியாக டான்ஸ் சொல்லிக் கொடுக்க முடியாமல் வந்து விடுகிறார் பார்வதி இடம் சொல்ல அவர் மீனாவுக்கு போன் போட்டு கேட்க வந்த உண்மையா என்று சொல்ல ஆரம்பிக்க வேண்டாம் ரகசியமாக இருக்கட்டும் என்று எனக்கு வேலை இருக்குன்னு சொல்லி கட் பண்ணி விடுகிறார்.
மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்க கூட்டமாக வருவதை பார்த்து நிறைய கஸ்டமர் வராங்க நிறைய அள்ளிட்டு போவாங்க எல்லாத்தையும் காமிங்க என்று சொல்லுகிறார் ஆனால் அவர்கள் ரவுடிகள் போல வருகிறார்கள் அப்போதுதான் தெரிகிறது., அது பீம் பாய் ஓட உறவினர்கள் என்று. இந்த மாதிரி போட்டோ அடிச்சு வச்சிருக்கீங்க அவன் தலையில பெரிய அடி பட்டு இருக்கு அம்பது ஆயிரம் செலவு பண்ணி இருக்கோம் நீ தான் காசு கொடுக்கணும் என்று சொல்லுகிறார். நான் எதுக்கு தரணும் என் தம்பி தான் அடிச்சா அதுவுமில்லாம ஒரு அடில விழுந்துட்டான் இவன் எல்லாம் ஒரு பீம் பாய்யா இருந்தா ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் என்று சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது நீ காசு எடுத்து வச்சு ஆகணும் என்று சொல்ல இல்ல போலீசுக்கு போன் பண்ணிட்டு தான் வந்திருக்கேன் போலீஸ் வருவாங்க என்று மிரட்டுகிறார். உடனே மனோஜ் என்கிட்ட காசு இல்ல என்று சொன்னவுடன் அதான் இவ்வளவு பெரிய கடை இருக்குல்ல என்று இதில் இருக்கும் பொருளை எடுத்துக்கிறோம் என்று அவர்களாகவே சென்று சில பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகின்றனர்.
சீதா கடையை பார்த்துக் கொண்டிருக்க அவங்க அம்மா வந்தவுடன் சரி நீ போ நான் பாத்துக்குறேன் என்று சொல்ல அவரும் வேலைக்கு கிளம்புகிறார். அந்த நேரம் பார்த்து ஒரு பெண்மணி வந்து இது உங்க பொண்ணாம நல்ல பொண்ணா இருக்கா எப்ப பாத்தாலும் புக்கு வச்சு படிச்சுக்கிட்டு இருக்கா பூவ கட்டிக்கிட்டு வேலை பார்த்துட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கா இந்த மாதிரி ஒரு பொண்ணு இந்த காலத்துல கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் எல்லாம் போன வச்சிட்டு இருக்குற காலத்துல அவ வேலைக்கு போய் சம்பாதிக்கணும்னு நினைக்கிறதா என்றெல்லாம் பெருமையாக பேச நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க உங்க பொண்ண பார்க்க நாங்க வரட்டுமா என் பையன் நல்லா சம்பாதிக்கலாம் நல்லா பார்த்துப்பான் எங்களுக்கு இந்த எழை பணக்காரங்க எல்லாம் கிடையாது நல்ல மனசு இருந்தா போதும் அதுதான் நாங்க எதிர்பார்க்கிறோம் அது உங்க பொண்ணு கிட்ட நிறையவே இருக்கு என்று சொல்ல சீதாவின் அம்மா யோசித்துக் கொண்டே இருக்கிறார். விருப்பம் இல்லையா உங்களுக்கு என்று கேட்க எங்க வீட்ல நான் மட்டும் முடிவெடுக்க முடியாது மாப்பிள்ளையும் பொண்ணு இருக்காங்க அவங்க கிட்ட கேட்டுட்டு சொல்றேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மீனாவுக்கு போன் போட மீனா என்ன சொல்லுகிறார்?என்ன நடக்கப் போகிறது? என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.