மீனா மீது பழி போட்ட விஜயா, கோபப்பட்ட அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மீனா மீது விஜயா திருட்டுப்பழிப்போட அண்ணாமலை கோபப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா புடவை வாங்க காசு கேட்க பார்வதி வந்து காசு தேடி பார்க்க காசு காணாமல் போனதை விஜயாவிடம் சொல்ல அவர் பதறிப் போகிறார். பிறகு ரதியின் அம்மாவிடம் நான் காசு கொடுத்துட்டு வாங்கிக்கிறேன் என்று சமாளித்து அனுப்பிவிட்டு மேலே வந்து அவர்கள் தேட பணம் இல்லாததால் எங்கு போயிருக்கும் என்று யோசிக்கின்றனர். துணி மடித்து வைத்திருப்பதை பார்த்த விஜயா மீனா இங்கே வந்தால அவதா திருடி இருப்பா என்று சொல்ல பார்வதி அவ அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது அவ பூக்கே காசு வாங்கல நான்தான் கட்டாயப்படுத்தி கொடுத்தேன் என்று சொல்லுகிறார். ஏற்கனவே அவ திருட்டு குடும்பம் தான் இதுல வேற அஞ்சு லட்சம் செலவு பண்ணி இருக்காங்க அது கடன்காரன் கேட்ருப்பா அதுக்கு திருடி எடுத்துக்கொண்டு போய் கொடுத்திருப்பா. என்று சொல்ல இப்படி எல்லாம் பேசாத விஜயா, உன்னோட மருமக என்று சொல்ல விஜயா அவதான் எடுத்திருப்பார் என்று உறுதியாக சொல்லுகிறார் நீ கேளு என்று சொன்னால் நான் கேட்க மாட்டேன் அந்த பொண்ணு நல்ல பொண்ணு என்று சொல்ல அப்ப நான் போன் பண்ற நீ போனை மட்டும் எடு என்று சொல்லி வீட்டிற்கு செல்கிறார்.
வீட்டுக்கு வந்து மீனா முத்துமிடம் ஒரு கல்யாணம் ஆர்டர் கிடைச்சிருக்கு என்று சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அண்ணாமலையும் மீனாவை பாராட்டுகிறார். அந்த நேரம் பார்த்து விஜயா உள்ளே வர மீனாவிடம் காபி கேட்டுவிட்டு உட்காருகிறார் பிறகு பார்வதிக்கும் மிஸ்டு கால் கொடுத்தவுடன் பார்வதி போன் பண்ண உடனே விஜயா ஒன்றும் தெரியாதது போல் பார்வதியை அமைதியாக இருக்க சொல்லிவிட்டு இரண்டு லட்சம் பணத்த காணுமா? மீனாதான் வந்தாளா? அவ தான் எடுத்தான்னு சொல்றியா? என்றெல்லாம் கேட்கிறார். உடனே ரோகினி மனோஜ் இருவரும் வருகின்றனர். உடனே ரோகினி இந்த பழி மீனா மேல விழுந்துருச்சா அதுவும் நல்லது தான் என்று யோசிக்கிறார். மீனா எடுத்தது போல விஜயா டிராமா போட்டுக் கொண்டிருக்க உடனே முத்து போனை வாங்கி நீங்க மீனா மேல பழிய போறீங்களா அத்தை, என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க அவ பணத்துக்கு ஆசைப்படுற ஆளா என்றெல்லாம் கோபப்பட்டு பேசுகிறார். பார்வதி எதுவும் சொல்ல முடியாமல் இருக்க பணம் காணாமல் போயிடுச்சு பா என்று சொல்ல காணாம போயிடுச்சுன்னா போய் கம்ப்ளைன்ட் குடுங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வரோம் என்று சொல்லி போனை வைக்க ரோகினி பதறுகிறார்.
உடனே முத்து விஜயா மீது கோபப்பட இவங்க குடும்பமே திருடுறவங்க தானே என்று சொல்லி அசிங்கப்படுத்துகிறார் உடனே முத்து அப்ப இந்த வீட்ல இருக்குறவங்க மட்டும் எல்லாரும் நல்லவங்களா கல்யாணம் மண்டபத்துல விட்டுட்டு ஓடினா அதுக்கு அப்புறம் நீங்களும் இவனும் சேர்ந்து நகை வந்து அடமானம் வைத்து வித்தீங்க அவங்களும் நல்லவங்களா என்று முத்து கேள்வி கேட்கிறார். மீனாதான் பொறுப்பு என்று விஜயா சொல்ல மீனா கதறி அழுகிறார். அண்ணாமலை வேற யாராவது கூட எடுத்து இருக்கலாம் இல்ல என்று சொல்ல இவ தான் எடுத்திருப்பார் என்று ஆணித்தனமாக பேசுகிறார். ஸ்ருதி மீனாவுக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார். உடனே விஜயா இவ வந்ததுக்கு அப்புறம்தான் பணம் காணாமல் போய் இருக்கு அதனால முத்துவும் மீனா வந்தான் இந்த காசுக்கு பொறுப்பேத்துக்கணும் என்று சொல்லுகிறார்.
உடனே கோபப்பட்ட அண்ணாமலை என்ன நடந்துச்சுன்னு இன்னும் தெரியாம அதுக்குள்ள இவங்க தான் பொறுப்பு ஏத்துக்கணும்னா எப்படி ஏத்துப்பாங்க உனக்கு என்ன இவங்க இந்த வீட்டை விட்டு போகணும் அதுதானே ஏற்கனவே போகணும் தான் போய் பையை தூக்கிட்டு உட்கார்ந்த இப்போ இது இந்த நாடகம் வேறயா என்று கேட்க உடனே இந்த அண்ணாமலை உயிரோடு இருக்கிற வரைக்கும் அவங்க இந்த வீட்டை விட்டு போக மாட்டாங்க அவங்க போகணும்னா இந்த அண்ணாமலை உயிரோடு இருக்க கூடாது என்று சொல்ல குடும்பத்தினர் பதறுகின்றனர். முத்து ஏன்பா இப்படி எல்லாம் பேசுற ஒன்னும் இல்லப்பா என்று சொல்லி சமாதானப்படுத்தி விட்டு இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும் என்று மீனாவை கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார். பிறகு முத்துவும் மீனாவும் மேலே இருக்க மீனா அழுது கொண்டே இருக்கிறார். அவங்க சொன்னா நீ திருடன்னு ஆயிடுமா எங்களுக்கு தெரியும் உன்னை பத்தி என்று சொல்லுகிறார். அப்பா என்ன சொன்னாரு மீனா அப்படி பண்ணிருக்க மாட்டா சொல்றாரு என்று சொல்ல இருந்தாலும் மீனா இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா நான் எப்படி பூ கொடுக்க போகிறது என்று சொல்லி அழுகிறார்.
பிறகு முத்துவும், மீனாவும் என்ன பேசிக் கொள்கின்றனர்? முத்து சொன்ன வார்த்தை என்ன? அதற்கு மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.