Pushpa 2

பணத்துக்காக கேசை வாபஸ் வாங்கிய விஜயா, சந்தோஷத்தில் முத்து, மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

விஜயா கேசை வாபஸ் வாங்க மீனாவும்,முத்துவும் சந்தோஷப்பட்டு உள்ளனர்.

siragadikka asai serial episode update
siragadikka asai serial episode update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வக்கீல் விஜயாவிடம் கேச வாபஸ் வாங்குமாறு கேட்க அவனை புடிச்சு ஜெயில்ல போடுங்க இவ்வளவு பெரிய திருடி இருக்கா நான் எப்படி வாபஸ் வாங்க முடியும் என்று சொல்ல பிறகு உங்களுக்கு அதனால எந்த பிரயோஜனமும் கிடையாது என்று பேச ஏன் பிரயோஜனம் கிடையாது என்று கேட்கிறார் ஒரு மாசம் ரெண்டு மாசத்துல அவன் வந்துருவான் என்று சொல்ல, ஆனா இப்ப நீங்க வாபஸ் வாங்கினீங்கன்னா உங்களுக்கு நான் பணம் கொடுக்கிறேன் என்று சொல்ல உடனே விஜயா எவ்வளவு கொடுப்பீங்க என்று கேட்கிறார். ஒரு அம்பது ஆயிரம் கொடுக்கிறோம் என்று சொல்ல அவ்வளவுதானா என்று கேட்கிறார். பிறகு ஒரு லட்சம் என்று சொல்ல நான் இன்னும் நிறைய கொடுப்பீங்கன்னு எதிர்பார்த்தேன் என்று சொல்லுகிறார் விஜயா. நான் மீண்டும் நீங்களே சொல்லுங்க என்று சொல்ல நான் ஒரு ரெண்டு லட்சம் கொடுப்பீங்கன்னு நெனச்சேன் என்று கேட்கிறார் பிறகு வக்கீலும் இதையே ஓகே என்று சொல்லி விஜயா 2 லட்சத்தை வாங்கிக் கொண்டு கேசை வாபஸ் வாங்குவதாக சொல்லிவிடுகிறார்.

முத்துவுக்கு போன் போட்ட வக்கீல் நடந்த விஷயங்களை சொல்ல முத்து சந்தோஷப்படுகிறார். பிறகு வீட்டில் இருக்கும் அனைவரிடமும் இந்த விஷயத்தை சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ரோகினி ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்று ஸ்ட்ரிக்டா சொன்னாங்க இப்ப எப்படி ஒத்துக்கிட்டாங்க என்று சொல்ல உடனே மீனா இப்ப அவங்க ஒத்துக்க கூடாதுன்னு சொல்றீங்களா ரோகிணி என்ற கேட்கிறார். உடனே முத்து நீ போய் அம்மாவ கூட்டிட்டு வாப்பா என்று சொல்ல அவ எப்படி போனாலும் வரட்டும் நான் போக மாட்டேன் என்று அண்ணாமலை சொல்ல நீ அம்மா இல்லை என்றால் ரொம்ப கஷ்டப்படுறப்ப அதனால கூட்டிட்டு வா என்று எல்லோரும் சொல்ல அண்ணாமலை மறுக்கிறார்.

ரவி வீடு டல்லா இருக்குப்பா என்று சொல்ல மழை பேஞ்சு செவரெல்லாம் ஊரி இருக்கும் பெயிண்ட் அடிச்சா சரியா போயிடும். என்று சொல்லி கிண்டல் அடித்துவிட்டு என் பொண்டாட்டி என் பேச்சை கேக்காம வீட்டை விட்டு போயிட்டா அவளே வரட்டும் என்னால கூட்டிட்டு வர முடியாது உங்களுக்கு அம்மா தேவைனா நீங்க போய் கூட்டிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு சீதா வேகமாக ஓடி வந்து நடந்த விஷயங்களை சந்திராவிடம் சொல்ல சந்தோஷப்படுகிறார். அக்காவும் மாமாவும் இங்கதான் வந்துட்டு இருக்காங்க என்று சொல்ல சந்திரா சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பாத்து முத்து மீனா மற்றும் சத்யா வர சந்திரா சத்யாவை கட்டிப்பிடித்து அழுகிறார். சத்யா சந்திராவிடம் இனிமே தப்பு பண்ண மாட்டமா எல்லாத்துக்கும் நான் தான் காரணம் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். என்கிட்ட கேட்காத அக்கா மாமா கிட்ட கேளு என்று சொல்லு சீதாவும் நீங்க பண்ணது வாழ்நாள்வரை மறக்க மாட்டேன் மாமா என்றெல்லாம் சொல்ல முதல்ல இந்த பாராட்டுறதெல்லாம் நிறுத்துங்க என்று முத்து சொல்லுகிறார்.

சத்யா நான் பண்ணதெல்லாம் தப்புதான் மாமா என்று முத்துவின் காலில் விழ,முத்து சத்தியா, அம்மா அப்பா காலை தவிர வேறு யாரு காலிலும் விழக்கூடாது. எனக்கு ஒன்னு பண்ணனும்னு நினைச்சா நல்லா படிச்சு நேர்மையான வழியில சம்பாதிச்சு நீ இந்த குடும்பத்துக்கு ஒரு தூணாய் இருக்கணும் என்று சொல்ல கண்டிப்பா இருப்ப மாமா என்று சொல்ல சந்திரா, முத்துவிடம் அம்மா இப்ப வீட்ல இல்லன்னு கேள்விப்பட்டேன் என்று சொல்ல ஆமாமா எப்படியோ பார்வதி ஆன்ட்டி வீட்ல தான் இருக்காங்க என்று சொல்ல நான் உங்கள போய் பாக்கணும், சத்யா பண்ண தப்புக்கு அவங்க அங்க இருக்காங்க இருக்கணும் பேசி பார்க்கலாம் என்று சொல்லி முடிவெடுக்க, முத்துவும் சரி என சம்மதித்து அனைவரும் கிளம்புகின்றனர்.

ரோகினியை மிரட்ட சிட்டி என்ன செய்யப் போகிறார்? விஜயாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial episode update
siragadikka asai serial episode update