நான் அப்பாவாகி விட்டேன் ஆண் குழந்தை பிறந்திருக்கு என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகர் வினோத் பாபு.

Sindhu Vinoth Babu Blessed With Boy Baby : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வினோத் பாபு. இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

அதிரடி ‘தெறி’ மேட்ச் : ஆப்கானிஸ்தானை, இந்தியா வீழ்த்தியது எப்படி? ஆடுகள விவரம்

மேலும் தற்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தன்னுடைய மனைவி சிந்து உடன் இணைந்து பங்கேற்று வந்தார். இவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் தற்போது அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

Enemy படம் எப்படி இருக்கு..? மக்களின் கருத்து..! | Public Review | Tamil | Vishal | Arya | Mirnalini

இந்த மகிழ்ச்சியான தகவலை வினோத் பாபு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரியப்படுத்தியுள்ளார். எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். குழந்தைக்கு வின்சன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

வினோத் பாபுவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.