‘அரசன்’ பட ப்ரோமோ: ரசிகர்களுக்கு சிம்பு மனமார்ந்த நன்றி

Web Ads

மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து சிம்பு ‘தக்லைப்’ படத்தில் நடித்திருந்தார். ஆனால், அப்படம் வரவேற்பு பெறவில்லை. தற்போது, சிம்புவின் ரசிகர்கள் அனைவரும் அரசன் திரைப்படத்தை ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வெளியாகி வைரலானது. வெற்றிமாறன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ திரையிலும், அதன் பிறகு யூ டியூப்பிலும் வெளியானது. 5 நிமிட ப்ரோமோவான இது ரசிகர்களை ஈர்த்து யூடியூபில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து அரசன் ப்ரோமோவிற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த ரசிகர்களுக்கு சிம்பு தனது நன்றியினை தெரிவித்திருக்கின்றார். தனது ட்விட்டர் பக்கத்தில், அரசன் ப்ரோமோவை கொண்டாட்டமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி. உங்களின் அன்பிற்கும் எனர்ஜிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்’ என கூறியுள்ளார்.

இப்படத்தின் ப்ரோமோ வெளியாவதற்கு முன்பு சிம்பு ஒரு பதிவு போட்டிருந்தார். இந்த ப்ரோமோவை திரையில் பார்த்து விடுங்கள். டைம் இருந்தால் கண்டிப்பாக அரசன் ப்ரோமோவை திரையில் பாருங்கள். கண்டிப்பாக அதற்கு வொர்த்தாக இருக்கும் என கூறியிருந்தார். அவர் சொன்னதை போலவே சிறந்த அனுபவமாக அமைந்ததாக ரசிகர்கள் சொல்கின்றனர்.

குறுகிய காலக்கட்டத்திற்குள் எடுக்கப்படும் ஒரு படமாக அரசன் இருக்கும் தெரிகிறது. அதன்படி, அடுத்தாண்டு கோடை விடுமுறையில் ‘அரசன்’ படத்தை எதிர்பார்க்கலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

simbu thanked fans for the response for arasan promo
simbu thanked fans for the response for arasan promo