வெந்து தணிந்தது காடு படம் பற்றி முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு படத்தை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கௌதம் வாசுதேவன் இயற்றியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு முதல் முறையாக இந்த படத்தை பார்த்து அவரது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். படம் சூப்பராக வந்திருப்பதாக சொல்லி கௌதம் மேனனை கட்டி அணைத்து பாராட்டியுள்ளார். ஆக்சன் லவ் ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த சூப்பர் டூப்பர் படமாக இது இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.