தனுஷுடன் சேர்ந்து பிரபல நடிகர் ஒருவரை நடிக்க விடாமல் சதி செய்துள்ளார் சிம்பு.

Simbu Plan Against Dhanush : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக நேரடியாக OTT-ல் வெளியான ஜகமே தந்திரம் மற்றும் மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளன.

தனுஷுடன் சேர்ந்து அந்த நடிகரை நடிக்க முடியாமல் சதி செய்த சிம்பு.. பத்திரிக்கையாளர் சொன்ன பரபரப்பு தகவல்

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது தனுஷ் ஜவஹர் இயக்கத்தில் உருவாகிவரும் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் அதற்கு போட்டியாக கருதப்படும் நடிகர் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தனுஷுடன் சேர்ந்து அந்த நடிகரை நடிக்க முடியாமல் சதி செய்த சிம்பு.. பத்திரிக்கையாளர் சொன்ன பரபரப்பு தகவல்

ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்கிறார். இப்படி பிசியாக இருந்து வரும் சிம்பு தனுஷுடன் சந்தானம் நடிக்க கூடாது என செய்த சதி பற்றி பிரபல பத்திரிக்கையாளர் என பிஸ்மி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதாவது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் முதலில் தனுஷுடன் இணைந்து சந்தானம் தான் நடிக்க இருந்துள்ளார். ஆனால் 3 படத்தில் நடிக்கக் கூடாது என சிம்பு சொல்லிவிட்டதால் சந்தானமும் அதைக்கேட்டு கடைசி நேரத்தில் என்னால் படத்தில் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.

இதனால் தான் வேறு வழி இல்லாமல் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு சந்தானத்தை போல விஜய் டிவியில் இருந்து வந்த சிவகார்த்திகேயனிடம் சென்றதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார்.