திடீரென்று சிம்பு பட தயாரிப்பாளரை சந்தித்துள்ளார் நடிகர் அஜித்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் இறுதியாக வலிமை திரைப்படம் வெளியான நிலையில் அதைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்தை சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்த ஐஸரி கணேஷ் அவர்கள் சந்தித்துள்ளார்.

எங்க சந்திப்புக்கான காரணம் முழுமையாக தெரிய வரவில்லை என்றாலும் அஜித் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க கால் சீட் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.