பிரபல நடிகையுடன் சிம்புவின் திருமணத்திற்கு ஓகே சொல்லியுள்ளார் டி ஆர்.

Simbu Marriage Details : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, 10 தல உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் கொரானா குமாரு என்ற திரைப்படமும் உருவாக உள்ளது.

பிரபல நடிகையுடன் விரைவில் சிம்புக்கு கல்யாணம்.. ஓகே சொன்ன பெற்றோர் - தீயாக பரவும் தகவல்

மேலும் நடிகர் சிம்பு, ஈஸ்வரன் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகையான நிதி அகர்வாலுடன் காதலில் இருந்து வருவதாகவும் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருவதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

பிரபல நடிகையுடன் விரைவில் சிம்புக்கு கல்யாணம்.. ஓகே சொன்ன பெற்றோர் - தீயாக பரவும் தகவல்
Simbu With Nidhi Agarwal

இந்நிலையில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு நல்ல நாளில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.