Simbu in Tirupati Temple
Simbu in Tirupati Temple

முகத்தை மூடிக்கொண்டு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் சிம்பு.

Simbu in Tirupati Temple : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இயக்குனரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்க இயக்குனர் வெங்கட்பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடிக்கிறார்.

பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Simbu & Suseendhiran Movie Update
Simbu & Suseendhiran Movie Update

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைவெளியில் நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொடுத்து விட முடிவு செய்து அந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் எஸ்டிஆர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தன்னுடைய முகத்தை மூடியபடி தரிசனம் செய்துள்ளார்.

சுசீந்திரன் படத்தில் நடித்து வரும் கெட்டப் யாருக்கும் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதன் காரணமாக அவர் முகத்தை மூடியபடி சாமி தரிசனம் செய்ததாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.