Simbu Advice to Dhanush

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்துள்ள நிலையில் தனுஷுக்கு சிம்பு போன் செய்துள்ளார்.

Simbu Advice to Dhanush : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டு 18 வருடங்கள் ஆன நிலையில் தற்போது விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

15 வயதில் யாத்ரா என்ற மகனும் பதினோரு வயதில் லிங்கா என்ற மகனும் உள்ள நிலையில் இப்படி ஒரு முடிவு தேவையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என பல திரையுலக பிரபலங்கள் தனுஷுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

சிறந்த நல்ல படங்களில் இதுவும் ஒன்னு – Sila Nerangalil Sila Manidhargal Stars Review | VishalVenkat

இந்த நேரத்தில் வாத்தி ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத்தில் உள்ள தனுஷிற்கு நடிகர் சிம்பு போன் செய்துள்ளார். போனில் தொடர்பு கொண்ட சிம்பு விவாகரத்து விஷயம் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.

தங்கம் வென்ற முன்னாள் கேப்டன் ‘ஜாம்பவான்’ சரண்ஜித் சிங் மரணம் : தலைவர்கள் இரங்கல்

அதாவது தயவு செய்து உங்களது முடிவை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களது பிள்ளைகளின் நலனுக்காகவும் அவர்களின் எதிர்காலத்திற்காக நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பலரும் நடிகர் சிம்புவை பாராட்டி வருகின்றனர். சிம்புவின் செயலைக் கண்டு அவரது ரசிகர்களும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.