மார்க் ஆண்டனி படத்தில் மறைந்த சில்க் ஸ்மிதா இடம் பெற்று இருப்பது எப்படி என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வினோத் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

எஸ் ஜே சூர்யா உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த ட்ரெய்லரில் சில்க் ஸ்மிதாவின் காட்சிகள் இடம் பெற்றிருக்க ரசிகர்கள் பலரும் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா இந்த படத்தில் வந்தது எப்படி என்று கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அது குறித்த ரகசியம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராம் மாடல் நடிகை விஷ்ணு பிரியா காந்தி தான் சில்க் ஸ்மிதாவாக நடித்துள்ளார். அவருக்கு சில்க் சுமிதா போன்ற முக அமைப்பு கொண்டதால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளார். மேலும் கொஞ்சம் கிராபிக்ஸ் வேலைகளும் நடந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த மார்க் ஆண்டனி திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.