தமிழ் தயாரிப்பில் சிம்பு நடிக்க உள்ள படத்தின் லுக் என சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக பின்னர் பல்வேறு படங்களில் நடித்த இவர் அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தின் உருவாக தனது 48வது படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் நடிகர் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.
இதுதான் நடிகர் சிம்புவின் அடுத்த பட லுக்கா என ரசிகர்களும் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.