Ratchasan

Sigai Movie : ராட்சசன் மாதிரி ஓட வேண்டிய படம் இப்படி ஆகிடுச்சே என பிரபல நடிகரான கதிர் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

தமிழ் சினிமாவில் விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் என வித்தியாச வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானவர் கதிர்.

இவரது நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பு உருவாகி இருந்த படம் சிகை. திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலாளிகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் நேற்று ஜீ 5 ஆப்பில் ரிலீசானது.

அஜித் படத்தால் தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகை – தல 59 நாயகி இவரே.!

இதற்கான காரணம் இரண்டு வருடம் ஆகியும் இந்த படத்தை வாங்க யாரும் முன்வராததால் இப்படத்தின் தயாரிப்பாளர் இப்படியொரு முடிவிற்கு தள்ளப்பட்டு விட்டார்.

இதனையடுத்து கதிர் தன்னுடைய நண்பர்களுக்கு இந்த படத்தை போட்டு காட்ட அவர்கள் படத்தை பார்த்து விட்டு திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் ராட்சசன் படம் மாதிரி ஓடி வெற்றி பெற்றிருக்கும் என கூறியுள்ளனர்.

இதனால் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்த இந்த படத்தின் நிலைமை இப்படி ஆகிடுச்சே என கதிர் மிகுந்த மனவேதனையில் உள்ளாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.