Thala 59 Heroine

Thala 59 Heroine : தல 59 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பது யார் என்ற தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து உள்ளார்.

வரும் ஜனவரி 10-ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ள இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர் தயாரிக்க உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் நஸ்ரியா, கல்யாணி, ஷர்த்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

அதே போல் சிம்புவின் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நெகடிவ் ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

மேலும் பிரபல பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டே இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

இவைகளை தொடர்ந்து தற்போது இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக நம்பகத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

வித்யா பாலன் தமிழ் பெண்ணாக இருந்தாலும் இதுவரை எந்தவொரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அஜித் படம் என்பதால் முதல் முறையாக தமிழில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.