நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் தொகுப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

ShrutiHaasan As Video Jackie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்ஹாஸன் அவர்களின் மூத்த மகள் சுருதிஹாசன். ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் நாயகியாக அறிமுகமான இவர் தல அஜித்துடன் வேதாளம் தளபதி விஜயடன் புலி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக 3 படத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் தொகுப்பாளராக அவதாரம் எடுக்கும் ஸ்ருதிஹாசன் - இப்போ எந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் தெரியுமா?

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி படங்களில் இவர் நடித்து வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் நடனம், பாடல் என பன்முகத்திறமைகளை கொண்டுள்ளார். மேலும் இவர் சில வருடங்களுக்கு முன்னர் சன் டிவியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தொகுப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளார். ஆனால் இம்முறை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பதிலாக OTT-யில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.