திருமணம் எப்போது என்று கேள்விக்கு முதல் முறையாக கூலாக பதில் அளித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான இவர் திரும்பிய சினிமா மொழிகளில் நடித்து வருவது மட்டுமின்றி பாடகியாகவும் பல்வேறு படங்களில் பாட்டு பாடி வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலுக்கு இசையமைத்தது மட்டுமின்றி அதில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இதற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதிஹாசனிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்ப எனது எனக்கு திருமணம் எப்போது என்ற கேள்வி கேட்டுட்டீர்கள் என கேட்டுள்ளார். தொகுப்பாளர் ஆமாம் என திரும்ப கேட்க எனக்கு அதில் தற்போதைக்கு ஆர்வம் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதுவரை திருமணம் என்றாலே நடிகைகளிடம் மட்டும் ஏன் இந்த கேள்வி கேட்கிறீர்கள் என கோபப்பட்டு வந்த ஸ்ருதிஹாசன் தற்போது முதல் முறையாக கூலாக பதில் அளித்துள்ளார். இவர் சாந்தனு ஹாசாரி என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.