செம உற்சாகத்தோடு ராஜா ராணி 2 சித்து, ஸ்ரேயா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Shriya Wishes to Sidhu : தமிழ் சின்னத்திரையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா. இந்த சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த இவர்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

சித்து தற்போது சரவணனாக ராஜா ராணி சீரியலில் நடித்து வருகிறார். ஸ்ரேயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சரவணனுக்கு விஜய் டிவி அவார்ட்ஸ் விருது விழாவில் ராஜா ராணி சீரியலுக்காக சிறந்த மகனுக்கான விருது கிடைத்துள்ளது. இந்த மகிழ்ச்சி தகவலை புகைப்படத்தை வெளியிட்டு கொண்டாடியுள்ளனர்.

இந்த நேரத்தில் ரசிகர்கள் பலரும் சித்துவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.