Shraddha Srinath
Shraddha Srinath

Shraddha Srinath – விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில்,

ஹாலிவுட்டையே அலறவிட்ட தமிழ் ராக்கர்ஸ் – ”யார் சாமி நீங்க” என புழம்பும் ஹாலிவுட் திரையுலகம்!

பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இந்தியில் டாப்சி நடித்த கேரக்டரில் தமிழில் நடிப்பவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இப்படத்தில் இணைந்த கதையை அவர் அண்மையில் கூறினார்.

அவர் கூறியதாவது, ” முதலில் ஒரு போன் கால் வந்தது அதன்பின் முப்பது நாட்கள் கழித்துதான் அடுத்த கால் வந்தது. அதுவரை என் பல்ஸ் என்னிடமே இல்லை. பல முறை லுக் டெஸ்ட் வைத்து முன்னோட்டம் பார்த்த பிறகே இந்த வாய்ப்பை எனக்கு வழங்கினார்கள்” என்றார்.