பிக் பாஸுக்கு பிறகு தர்ஷனுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார் ஷெரின், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பெரிய அளவில் பிரபலமானவர் தர்ஷன், மக்கள் அனைவருமே இவர் தான் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்த்து ஏமார்ந்தனர்.
மேலும் இவருடைய வெளியேற்றத்திற்கு ஷெரினுடன் இருந்த நட்பும் காரணம் என பேசப்பட்டு வந்தது. இது ஷெரீனையும் மிகவும் காயப்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் சந்தித்து கொண்டுள்ளனர், பிக் பாஸ் கொண்டாட்டத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட தர்ஷனுடன் சேர்ந்து ப்ராக்டிஸ் எடுத்து கொண்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.