
Shankar’s Next : 2.O படத்தை தொடர்ந்து மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தன்னுடைய அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி இருந்த படம் 2.O. ரஜினிகாந்த், அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த படம் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய அடுத்த பிரம்மாண்ட படம் குறித்த தகவலை பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
அதாவது 2.O படத்தை தொடர்ந்து ஒரு கதையை யோசித்து வைத்துள்ளாராம். அந்த படம் சயின்ஸ் பிக்சன் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.
ஆனால் அந்த கதையை நினைத்து பார்க்கும் போதே அது 2 பாயிண்ட் ஓ படத்தை விட மிக பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.
2 பாயிண்ட் ஓ படத்தின் வெற்றிக்கு பிறகு ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.