Shankar Next Movie

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

Shankar Next Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். தொடர்ந்து பிரமாண்ட படங்களை இயக்கி வரும் இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சங்கர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது இவர் அடுத்ததாக கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரும் கேஜிஎப் படத்தின் ஹீரோவான நடிகர் யாஷ் உடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் மேலும் நான்கு ஹீரோக்கள் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.