ஷாங்-ச்சி அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் என்ற சீனப் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Shang-Chi and the Legend of the Ten Rings Review : மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆசிய நாட்டு இயக்குனர் படத்தை இயக்கி ஆசிய நாட்டு ஹீரோ ஒருவர் நடித்துள்ள திரைப்படம் தான் ஷாங்-ச்சி அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ்.

சக்தி வாய்ந்த 10 வளையங்களை வைத்துக் கொண்டு சாம்ராஜ்யத்தை வீழ்த்தி சாதனை படைத்த தந்தையை எதிர்க்கிறான் அவரது மகன். தந்தையை எதிர்த்து மகன் வெற்றி பெற்றதா இல்லையா இதற்குள் என்னவெல்லாம் நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை மற்றும் கதைக்களம்.

மக்களை கவர்ந்ததா ’ஷாங்-ச்சி அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ்’? - முழு விமர்சனம்.!!

படத்தை பற்றிய அலசல் :

படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் அவர்களை சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். ஹாலிவுட் படம் என்பதால் சண்டைக் காட்சிகள் அனைத்தும் தரமாக இருந்தன.

படத்தில் நடிகர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தமிழ் டப்பிங் அனைத்தும் கச்சிதமாக கைகொடுத்தது.

படத்தில் விலங்குகள் பேசுவது குழந்தைகளை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது.

சீட் நுனியில் உட்கார வைத்து ரசிக்க வைக்கும் அளவுக்கு திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமாதமாக அமைந்துள்ளன.

மொத்தத்தில் ஷாங்-ச்சி அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் படத்தை குழந்தைகளுடன் பார்த்து ரசிக்கலாம்.