shah rukh khan

Shah Rukh khan : அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 63 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு சின்ன கேமியோ ரோலில் நடிப்பதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

அட்லியும் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரமும் ஒரே நேரத்தில் ஷாருக்கானை ட்விட்டரில் பின்தொடர்ந்தது தான் இதற்கான காரணமாகவும் பார்க்கப்பட்டது.

அதன்பின் இயக்குனர் அட்லி மெர்சல் படத்தை இந்தியில் எடுக்கப் போவதாகவும் அதில் ஷாருக்கான் நடிப்பார் என்றும் பேசப்பட்டது.

தர்பார் பற்றி ட்வீட் போட்டு சிக்கி கொண்ட அட்லீ – விஜய் ரசிகர்கள் மிரட்டல்.!

இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற CSK vs KKR ஆட்டத்தை இயக்குனர் அட்லி, ஷாருக்கான் அருகில் அமர்ந்து கண்டு களித்தார்.

அதே நாளில் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றதால் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.

அதேசமயம் அடுத்த படத்திற்கான பேச்சு வார்த்தையில்தான் இருவரும் இருப்பதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

Shah rukh khan
Shah rukh khan
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.