Atlee

Atlee Tweet : தர்பார் பற்றி ட்வீட் செய்த அட்லீயை விஜய் ரசிகர்கள் மிரட்டலோடு அப்டேட் கேட்டு வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை அதிகாரபூர்வமாக வெளியாகி இருந்தது.

ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் ஆவலுடன் தங்களது கருத்துகளை பதிவு செய்து வந்தனர். தளபதி 63 இயக்குனர் அட்லீயும் டிவீட் செய்திருந்தார்.

செம கியூட்டான லுக்கில் ஷாலினியுடன் குட்டி தல – வைரலாகும் புகைப்படம்

அவரது டீவீட்டை பார்த்த தளபதி ரசிகர்கள் தர்பார் பற்றி ட்வீட் போடுறது இருக்கட்டும். நம்ம படத்தோட அப்டேட் எங்க என அவரை போட்டு தாளித்தெடுத்து வருகின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது சூர்யா ரசிகர்கள் NGK கேட்டு புலம்பிகிட்டு இருந்தது தான் நினைவிற்கு வருகிறது என சிலர் கமென்ட் அடித்து விஜய் ரசிகர்களை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

மனைவியானால் அது விஜய்க்கு மட்டும் தான் – பிரபல நடிகையின் விபரீத ஆசை.!

ஒரு சிலரோ கத்தி எல்லாம் வைத்து கொண்டு அட்லீயை மிரட்டி அப்டேட் கேட்டுள்ளனர். ரசிகர்களின் வேண்டுகோள்களுக்கும் மிரட்டல்களுக்கு அட்லீ செவி சாய்ப்பாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.