ஷார்ட் ஹேரில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் ஷபானா.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ஷபானா.

மிகப்பெரிய வரவேற்பை பெற்று 1400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது ஆர்யன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார். புது சீரியலில் நடிக்க தயாராகி வரும் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷார்ட் ஹேரில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.