Master Second Look

மாஸ்டர் திரைப்படத்தின் உலகளாவிய ரிலீஸை முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தை விஜயின் உறவினரான பிரிட்டோ தயாரிக்கிறார்.

சம்மர் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும் அர்ஜுன் தாஸும் நடிக்கின்றனர். மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு என பல முக்கிய நடிகர் நடிகைகள் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.