நடிகை ரோஷினி வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்னும் தொடர் மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமானவர் ரோஷினி ஹரிப்ரியன். இதில் கண்ணம்மாவாக தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவர் திடீரென்று சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். அதன் பிறகு பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 3 -ல் போட்டியாளராக களம் இறங்கிய ரோஷினி தற்போது வெள்ளி திரையில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி முயற்சித்து வருகிறார்.

எப்போதும் சோசியல் மீடியா பக்கங்களில் விதவிதமான ஆடைகளில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அனைவரையும் கவர்ந்து வரும் இவர் தற்போது கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார். அந்த வகையில் தொடர்ந்து ரோஷினி வெளியிட்டு கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.