
Sembaruthi 26.10.18 : கொலுவில் அனைவரும் பார்வதியைப் பாட்டு பாட சொல்கிறார்கள். அப்போது பார்வதி கண்ணணை நினைத்து பாட்டு பாடுகிறாள். அகிலாவும் மற்றவர்களும் பார்வதி அழகாகப் பாடினால் என்று பாராட்டுகிறார்கள்.
ஆனால் வனஜா கடுங்கோபத்துடன் பார்வதியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
கொலுவிற்கு வந்த அனைவரும் சென்றபின் வனஜா கோபத்துடன் பார்வதியிடம் சென்று நீ கண்ணனை நினைத்து பாடினாயா? இல்லையென்றால் ஆதியை நினைத்து பாடினாயா?என்று கேட்டு அடிக்க பார்க்கிறாள்.
அப்போது ஆதி வந்து விடுகிறார். ஆதி, வனஜாவிடம் பார்வதி என்னை நினைத்து பாடவில்லையே ,கண்ணனை தானே நினைத்து பாடினாள்.
வேண்டுமென்றால் இன்னொரு முறை பாட வைத்து தெளிவா புரிந்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
வனஜா ஆதியிடம் அவமானப்பட்டு திரும்பிச் சென்று விடுகிறாள் . வனஜா அறைக்கு ஐஸ்வர்யா வருகிறார் . ஐஸ்வர்யாவிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வனஜா கூறுகிறாள்.
ஐஸ்வர்யா வனஜாவிடம் நாளையோடு கொலுவின் கடைசி நாள் சவாலில் ஜெயிப்பதற்காக எதாவது திட்டத்தை தீட்டி இருக்கிறீர்களா என்று கேட்கிறார்.
அதற்கு வனஜா ஒரு திட்டம் தயாராக இருக்கிறது என்று கூறுகிறார். பிறகு வனஜா நந்தினிக்கு போன் செய்கிறாள் .
போனில் நந்தினியிடம் நாளையோடு கொலுவின் கடைசி நாள் முடிகிறது. அதற்கு பிறகு அகிலா, ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் கொடுக்க தயராகி விடுவாள். அதை தடுக்க ஏதேனும் திட்டமிட்டு இருக்கிறாயா என்று கேட்கிறார். நந்தினி அதற்கு , அகிலா ஊழியருக்கு போனஸ் கொடுக்க மாட்டாள்! அதற்கான திட்டம் ரெடியாக என் கையில் இருக்கிறது என்கிறாள்.
தோட்டத்தில் பார்வதியை ஆதி சந்திக்கிறார். அப்பொழுது பார்வதியிடம் நாளை கொலுவின் இறுதி நாள். வனஜா சித்தி சவாலில் ஜெயிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள் .
சற்று ஜாக்கிரதையாக இரு என்று பார்வதி எச்சரிக்கிறார். அதற்கு பார்வதி பரம்பரை செயின் என் கழுத்தில் இருப்பதற்கே வனஜா அம்மா இவ்வளவு கோபப்படுகிறார்கள். நீங்கள் கட்டிய டெமோ தாலி என் கழுத்தில் உள்ளது .அதை நினைத்தால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது என்கிறார்.
மேலும் அனைவரது சம்மதத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க வேதங்கள் பாட நீங்கள் எப்போது என் கழுத்தில் தாலி கட்டிகிறிர்களோ அன்று தான் என் வாழ்க்கை முழுமை அடையும் என்கிறார் பார்வதி. கொலுவின் இறுதி நாளன்று சவாலில் ஜெயிப்பது வனஜாவா ? பார்வதியா ? நாளை பார்க்கலாம்.