Pushpa 2

தனுஷை பார்த்து எனக்கு பொறாமையாக உள்ளது: செல்வராகவன் ஸ்பீச்..

‘தனுஷின் கடின உழைப்பை பார்த்து, எனக்கு பொறாமையாக உள்ளது’ செல்வராகவன் வியந்துள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்..

தமிழ் சினிமாவில், அண்ணன் செல்வராகவனால் நடிகராக அறிமுகமாகி, பின்னர்.. பாடலாசிரியராக, பாடகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் தனுஷ்.

இவரது இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படம் ரிலீஸ்க்கு ரெடியாக உள்ளது. அதேபோல், இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

தனது 50-வது படமான ராயன் படத்தினை தானே இயக்கி நடித்தார். இதில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராயன் படம் வசூல் ரீதியாக ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்திருந்தது. இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன்,

‘தனுஷின் கடின உழைப்பைப் பார்த்து எனக்கு வியப்பாக உள்ளது. ராட்சசத்தனமாக உழைக்கின்றார். இரவு பகல் என தூங்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றான். எனக்கு பொறாமையாக உள்ளது. நாமும் இப்படி இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகின்றது.

தனுஷ் இயக்கத்தில் நடிக்கும்போது, அவர் கூறுவதை நாம் அப்படியே செய்யவேண்டும் என இல்லை. ஆனால், அதைக் கெடுக்காமல் செய்தால் போதுமானது. அவருக்கு என்ன வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்’ என பதில் அளித்தார்.

‘இவரது இந்த பதிலில் இரவு பகல் பார்க்காமல் உழைக்கின்றார்’ என்ற சொற்கள் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது. மேலும், ஓய்வு இல்லாமல் ரசிகர்களை மகிழ்விக்க தனுஷ் கஷ்டப்படுகின்றார் எனவும் கவலை அடைந்தும் வருகின்றனர்.

இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் குபேரா. இப்படம், டிசம்பர் கடைசியில் வெளியாகும் என கூறப்படுகின்றது. செல்வராகவன் நடிப்பில் ‘சொர்க்கவாசல்’ படம் வரும் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.

அப்றம்.. ‘நம்மைப் போல நெஞ்சம் கொண்ட அண்ணன், தம்பி யாருமில்லைன்னு செல்வராகவன் சார் பதிவை மேலும் எதிர்பார்ப்போம்..!

selvaraghavan opens about dhanush hard work and directing style
selvaraghavan opens about dhanush hard work and directing style