Sarkar

Sarkar Chennai BO Report : சர்கார் படத்தின் ஆட்டம் முடிவு வந்து விட்டது, இதனையடுத்து சென்னையில் இப்படத்தின் மொத்த வசூல் எவ்வளவு என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வெளியாகி இருந்த சர்கார் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வந்தது.

தீபாவளிக்கு வெளியான இப்படம் சென்னையில் சுமார் 50 நாட்களை தாண்டி வீர நடை போட்டு வந்தது. தற்போது சென்னையில் சர்கார் படம் திரையிடப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை இப்படம் சென்னையில் மட்டும் ரூ 14.85 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இருப்பினும் ரசிகர்களுக்கு ஒரு சிறிய வருத்தம்.

அது என்னவென்றால் என்ன தான் சர்கார் படம் உலகம் முழுவதும் பல்வேறு படங்களின் சாதனைகளை முறியடித்து புதிய மைல் கல்லை தொட்டிருந்தாலும் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தின் வாழ்நாள் சாதனையை முறியடிக்க முடியவில்லை என்பது தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.