கார்த்தியின் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தின் வெளியாகியுள்ள திரைப்படம் சர்தார். உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ராசி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கதைக்களம் :

போலீஸ் அதிகாரியான கார்த்தி தனது வேலையின் மூலம் அனைவரும் பேசப்படும் ஒருவராக இருக்க வேண்டும் என முயற்சி செய்து வருகிறார். அப்படியான சமயத்தில் ராணுவ ரகசியங்கள் கசிய விடுவது யார் என்பதை கண்டு பிடிக்கும் பெரிய வேலை இவரிடம் கொடுக்க அதில் ஒரு விபரீதம் நடந்து விடுகிறது. அப்படி நடந்தது என்ன? அடுத்து என்னவானது என்பது தான் இந்த ஸ்பை த்ரில்லர் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் கார்த்தி அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் தரமான நடிப்பை கொடுத்துள்ளார். படத்தில் நடித்துள்ள லைலா, ராணி கண்ணா, உள்ளிட்டோர் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஆக்ஷன், எமோஷன் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார் கார்த்தி. ஜிவி பிரகாஷ் இசை படத்துக்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவு அருமை.

பி எஸ் மித்ரனை குட்டி ஷங்கர் என சொல்லும் அளவுக்கு திறம்பட படத்தை இயக்கியுள்ளார்.

வழக்கமான சில லாஜிக்கல் தவறுகள் தான் படத்தில் இடம் பெற்றுள்ளன.

REVIEW OVERVIEW
சர்தார் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
sardar-movie-reviewமொத்தத்தில் சர்தார் தீபாவளி சரவெடி.