குலுகுலு படத்தின் விழாவில் நடிகர் சூர்யா குறித்த கேள்வியால் சந்தானம் கோபம் அடைந்துள்ளார். அதனை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் காமெடியானாக தனது பயணத்தை ஆரம்பித்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக தொடர்ந்து பல படங்கள் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “குலுகுலு”. இப்படத்தை மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்தினகுமார் இயக்கியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கான பங்க்ஷன் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சந்தானத்திடம் பத்திரிக்கையாளர்கள் நடிகர் சூர்யா வாங்கியுள்ள தேசிய விருதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தனர்.

ஏனென்றால் சந்தானம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் ரிலீஸ் ஆனபோது ‘சபாபதி’ படத்தின் படவிழாவில் ஒரு சமூகத்தை தாழ்த்திப் பேசி படம் எடுக்காதீர்கள் என்று ஜெய்பீம் படத்தை மறைமுகமாக சந்தானம் குறிப்பிட்டிருந்தார். இதனால் சந்தானம் மற்றும் சூர்யா இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சூர்யா தேசிய விருது வாங்கியதை குறித்த கேள்விக்கு நடிகர் சந்தானம் அதைப் பற்றி சொல்ல எல்லாம் எனக்கு நேரம் கிடையாது என்றும் வேற ஏதாவது குலுகுலு படத்தைப்பற்றி கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என்று கடுப்போடு கூறியிருக்கிறார். இவ்வாறு இவர் பழசை மறைக்காமல் சூர்யா மீது கோபத்துடன் இருப்பதை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் சந்தானத்தை விமர்சித்து வருகின்றனர்.