லோகேஷ் கனகராஜை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்த சஞ்சய் தத்தின் வாழ்த்து பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜயுடன் இணைந்து அவரது 67வது திரைப்படமாக உருவாகும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடும் குளிரில் காஷ்மீரில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படப்பிடிப்பு தளத்தில் இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லியோ படபிடிப்பு தளத்தில் லேட்டஸ்டாக இணைந்துள்ள பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்கள் லோகேஷ் கனகராஜை கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதனை ரசிகர்கள் #SanjayDutt என ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.