Sangathamizhan
பல பிரச்சனைகளை கடந்து வெளியான சங்க தமிழன் படத்தை பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

சங்க தமிழன் அரசியல் கலந்த படமாக உருவாகி இருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து இருப்பார்.

இந்த படத்தை விஜயா புரொடெக்ஷன் தயாரித்தது. இதே தயாரிப்பு நிறுவனம் தான் தல அஜித்தை வைத்து வீரம் மற்றும் விஜய்யை வைத்து  படத்தை தயாரித்தார்கள்.

இந்த நிலையில், சங்க தமிழன் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, படத்திற்கு சிக்கல் ஏற்படவே தாமதமாக படம் வெளியானது.

ஒரு வழியா தீர்ந்த பிரச்சனை –வெளியானது சங்கத்தமிழன் .!

வெள்ளி கிழமை படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சனி கிழமை படத்தை படக்குழு வெளியிட்டது.

தற்போது இந்த படம் பார்க்க ரசிகர்கள் பெரிதாக வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெளியாகி இன்னும் 1 வாரமாகவில்லை.

இருந்தாலும், படத்திற்கு கூட்டம் வரவில்லையே என்று திரையதிபர்கள் தங்களின் கவலையை தெரிவித்து உள்ளார்கள்.

மேலும், இந்த படத்தில் முதலில் விஜய் நடிக்க இருந்ததாகவும் பின் சில காரணங்களால் விஜய் இந்த படத்தில் நடிக்க மறுத்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here