Sanam Shetty Reply to Meera Mitun

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார் சனம் ஷெட்டி.

Sanam Shetty Reply to Meera Mitun : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை முதல் 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த சனம் ஷெட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் நேற்று அவர் வெளியேற்றப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சனம் ஷெட்டிக்கு ஆதரவாக தொடர்ந்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் சனம்ஷெட்டி இருந்தபோது அவருக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் உருவான வண்ணம் இருந்தன.

ஒரு முறை பாலாஜி முருகதாஸ் சனம் ஷெட்டி அழகி பட்டத்தை வென்ற நிறுவனம் டுபாகூர் கம்பெனி என கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போது மீராமிதுன் பாலாஜி முருகதாசுக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யார் டுபாக்கூர் என்பது மக்களுக்கு தெரியும் என மீரா மிதுனுக்கு பதிலளித்துள்ளார்.

மேலும் மீரா மிதுன் தன்னை ட்விட்டர் பக்கத்தில் பிளாக் செய்து வைத்திருப்பதாகவும் ஸ்க்ரீன் ஷாட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.