Samantha Pair With Prashanth
நடிகர் பிரசாத்துக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Samantha Pair With Prashanth : தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்க உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்க உள்ளார்.

போட்டி பலமா இருக்கும் போல.. தனுஷின் ஜகமே தந்திரம் படத்துடன் மோத போகும் பிரபல நடிகரின் படம் எது தெரியுமா? – வெற்றி யாருக்கு கிடைக்கும்?

இந்த படத்தை தொடர்ந்து சமந்தா அஸ்வின் சரவணன் இயக்க உள்ள படத்தில் ப்ரஷாந்துக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளதாம். அஸ்வின் சரவணன் டாப்ஸீயை வைத்து கேம் ஓவர் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.