Chakra Clash With Jagame Thanthiram
தனுஷின் ஜகமே தந்திரம் படத்துடன் இன்னொரு படம் மோத போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Chakra Clash With Jagame Thanthiram : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

இப்படம் உலகம் முழுவதும் வரும் மே 31-ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்டத்துடன் இன்னொரு நடிகரின் படமும் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அதாவது விஷால் நடிப்பில் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள சக்ரா திரைப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன.

இந்த படத்தையும் மே 31-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.