நடிகை சமந்தா பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Samantha new look photos trending:

தென்னிந்திய திரை உலகில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி குஷி திரைப்படம் வெளியாக உள்ளது. விஜய் தேவர் கொண்ட கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு தற்போது சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்திருக்கும் சமந்தா சமீபத்தில் தனது தோழியுடன் சுற்றுலா சென்று இருந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு நியூ லுக்கில் எடுத்திருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வருகிறது.