நயன்தாராவின் வாடகை தாய் விவகாரம் குறித்து பேசியுள்ளார் சமந்தா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக யசோதா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

நயன்தாராவின் வாடகைத் தாய் விவகாரம்.. சமந்தா கொடுத்த நச் பதில் - என்ன சொல்கிறார் பாருங்க

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா அதற்கான சிகிச்சையை எடுத்து வந்த நிலையில் அடுத்ததாக யசோதா பட ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து பல பேட்டிகளை அளித்து வருகிறார்‌.

அந்த வகையில் இணையதள பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த போது நயன்தாராவின் வாடகை தாய் சர்ச்சை குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சமந்தா, நான் யாரை பற்றியும் ஒபினியன் சொல்ல விரும்பவில்லை. சந்தோஷமாக இருந்தால் சரி தான் என தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் வாடகைத் தாய் விவகாரம்.. சமந்தா கொடுத்த நச் பதில் - என்ன சொல்கிறார் பாருங்க

மேலும் அது யசோதா படத்துக்கு கிடைத்த ஃப்ரீ மார்க்கெட்டிங் என தெரிவித்துள்ளார். யசோதா படமும் வாடகைத் தாய் பற்றிய கதை தான் என்பது குறிப்பிடத்தக்கது.