தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க இன்னும் இரண்டு நடிகர்கள் கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64 . லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸும் கமிட்டாகி இருந்தனர். இவர்களை தொடர்ந்து இன்னும் இருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக ஒரு தகவல்.

அந்த இருவர் வேறு யாரும் இல்லை, நடிகர் சாய் தீணாவும் மகாநதி ஷங்கரும் தான் என கூறப்படுகிறது, ஆனால் படக்குழு இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.Thalapathy 64 Villians

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.