ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் திரைப்படம்..5நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சச்சின் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

sachin movie re release movie 5 days collection update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படங்களில் ஒன்று சச்சின். இந்தத் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார். மேலும் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், தாடி பாலாஜி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் 5 நாளில் மட்டும் உலகளவில் 7.2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. விஜய் தற்போது ஜனநாயகன என்ற படத்தில் நடித்து வருகிறார்.இது விஜய்யின் கடைசி படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

sachin movie re release movie 5 days collection update
