தியேட்டரில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்த்துள்ளார் நடிகை ரோஜா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் துணிவு.

தியேட்டரில் துணிவு படத்தை பார்த்த ரோஜா..  வைரலாகும் போட்டோ

வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பின் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியானதில் இருந்து தற்போது வரை எக்கச்சக்கமான சாதனைகளை துணிவு படைத்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

தியேட்டரில் துணிவு படத்தை பார்த்த ரோஜா..  வைரலாகும் போட்டோ

இந்த நிலையில் தற்போது நடிகையின் நகரி தொகுதி எம்எல்ஏவுமான ரோஜா திரையரங்கு சென்று அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை பார்த்து ரசித்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.